கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி கூட்டம்
மாநகராட்சிக்கு
ரூ.48லட்சம் வருவாய் இழப்பு - அதிகாரிகள் முறைகேடுகள்
தொடர்பாக நீதிமன்றம் –
முதலமைச்சரிடம் முறையிடுவேன் –
மாநகர கூட்டத்தில்
பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன் பேச்சு
ஓசூர். ஏப். 26. –
ஒசூர் மாநகராட்சி அறிஞர் அண்ணா மாமன்ற கூட்டரங்கில் மாநகர மேயர் சத்யா தலைமையில் மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில்
தி.மு.க., கவுன்சிலரும்,
மாநகர பொது சுகாதாரக்குழு தலைவருமான
N.S. மாதேஸ்வரன்
பேசியதாவது:
பழைய பொருட்கள் குடோன்களால், மாநகராட்சி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் மாநகராட்சி எல்லைக்குள் இருந்து பழைய பொருட்கள் குடோன்களை அப்புறப்படுத்த வேண்டும்.
வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் உலக அளவில், 13 வது இடத்தில் ஓசூர் இருப்பதாக நாம் பெருமை கொள்கிறோம். அப்படிப்பட்ட நகருக்கு நாம் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
எந்த பிரச்னையாக இருந்தாலும், கவுன்சிலர்களாகிய எங்களிடம் தான் மக்கள் கேள்வி கேட்கிறார்கள். சாவு வீட்டிற்கு சென்றால் கூட கேள்வி கேட்கின்றனர்.
அதிகாரிகளால் கெட்டப்பெயர்
ஆனால் பணிகள் செய்து கொடுக்க வேண்டிய அதிகாரிகள் பணி செய்வதில்லை.
நமக்கு நல்ல முதல்வர் கிடைத்துள்ளார். பல்வேறு திட்டங்களை செய்து கொடுக்கிறார்.
அதிகாரிகளால் தான் எங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.
அரசு மருத்துவமனை விடுதி
ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள விடுதி அறையை, கிராமப்புறங்களில் இருந்து வரும் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் ஒழிப்பு
பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆய்வு செய்வதை அதிகாரிகள் குறைத்து விட்டனர். கடந்த, 4 மாதங்களில், 300 கிலோ மட்டுமே பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் குறைவு. குடோன்களில் பல ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் கவர்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
புகையிலை ஒழிப்பு
புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஏன் ஆய்வு செய்து சீல் வைப்பதில்லை.
.
பகலில் தெருவிளக்குகள்
எரிகின்றன.
பொது இடங்களில் தாய்மார்கள் பாலுாட்டும் அறைகள் அமைக்கப்படவில்லை. இருப்பதும் பராமரிக்கப்படவில்லை. பொது இடங்களுக்கு வரும் தாய்மார்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தியேட்டர்களில் கழிவறைகள் மிகவும் மோசமாக உள்ளன.
மாநகராட்சி பில்கலெக்டராக
இருந்த விஜயா என்பவர் துப்புரவு பணியாளராக செல்கிறேன் என கூறுகிறார்.
அந்த அளவிற்கு வசூல் செய்து தர வேண்டும் என உயர் அதிகாரிகள் தொல்லை கொடுக்கின்றனர்.
ரூ.48லட்சம் வருவாய் இழப்பு
ஓசூர் பஸ் ஸ்டாண்ட் தகுதிச் சான்று புதுப்பிக்கப்பட்டு பஸ்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்வதை ஒப்பந்ததாரருக்கு வழங்கவில்லை.
மாநகராட்சி நிர்வாகமும் வசூல் செய்யாததால், 48 லட்சம் ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது ஆடிட்டர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கு உதவி கமிஷனர், சிறப்பு வருவாய் ஆய்வாளர் போன்றவர்கள் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர்களுக்கு பயிற்சி அளித்தது போல், பொறுப்பாக இருக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
ஒரு அதிகாரி மட்டும் மாநகராட்சி அல்ல. மேயர் கவுன்சிலர்கள் கூறுவதை,
70 சதவீதம் கேட்க வேண்டும்.
நாங்கள் தான் மக்களுடன் இருக்கிறோம். மீதமுள்ள,
30 சதவீதத்தை அதிகாரிகள் கூறுவதை கேட்கட்டும்.
குறைகளை சுட்டி காட்டினால் என்னை பழிவாங்க நினைக்கின்றனர். நான் பலபேரை பார்த்து விட்டேன். சுயேச்சையாக நின்று கவுன்சிலராக வெற்றி பெற்றவன்.
அதிகாரிகள் முறைகேடு தொடர்பாக நீதிமன்றம், முதல்வரிடம் முறையிடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
------------------------.