கிராம சபை கூட்டம்
நவம்பர் 1 -ம் தேதி
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
333 கிராம ஊராட்சிகளிலும்
கிராம சபைக் கூட்டம்
நடைபெற உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
ஓசூர். அக். 30. –
உள்ளாட்சி தினம்
கிராம சபை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
333 கிராம ஊராட்சிகளிலும்
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு
நவம்பர் 1-ம் தேதியன்று
கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
333 கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற
2025- நவம்பர் 1-ம் தேதி
உள்ளாட்சிகள் தினத்தன்று
சனிக்கிழமை காலை 11.00 மணியளவில்
கிராம சபைக் கூட்டம்
நடைபெற உள்ளது.
ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், சென்னை அவர்களிடமிருந்து வரப்பெற்ற கூட்டபொருள்கள் குறித்து கிராம சபையில் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், கிராம சபை கூட்டத்தினை மேற்பார்வையிட ஊராட்சிகள் அளவில்
தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
மேற்படி கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற அனைத்து
தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
மூலமாக தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதனைக் கண்காணிக்கும் பொருட்டு
மாவட்ட அளவிலான அலுவலர்களை
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும்
நியமனம் செய்யப்பட்டுள்ளது
எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே அனைத்து பொதுமக்களும்
கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையலாம் என்று
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
----------------------------.