வானியல் வல்லூநர்
கலிலியோ கலிலி
ஜனவரி – 07 – கலிலியோ கலிலி
கலிலியன் நிலவுகளைக்
கண்டுபிடித்தார்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்
ஓசூர். ஜனவரி. 07. –
நான்கு பெரிய நிலவுகள்
கண்டுபிடிப்பு
இத்தாலிய வானியலாளரான
கலிலியோ கலிலி
1610-ம் ஆண்டு ஜனவரி 7-ம் நாள்
வியாழன் கோளைச் சுற்றி வரும்
அயோ,
யூரோபா,
கேனிமீட்
காலிஸ்டோ
ஆகிய நான்கு பெரிய நிலவுகளைக் கண்டறிந்தார்.
கலிலியன் நிலவுகள்
அவர் காலத்திற்குப் பின்பு அவரின் கண்டுபிடிப்பை சிறப்பிக்கும் வகையில் அந்நிலவுகளுக்கு கலிலியன் நிலவுகள் என்று பெயர் சூட்டப்பட்டது.
வியாழன் கோளின் நான்கு பெரிய துணைக்கோள்கள்
கலிலியோ கலிலி தமது வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொலைநோக்கியைப் பயன்படுத்தி வியாழன் கிரகத்தைச்
சுற்றி வரும் நான்கு நிலவுகளைக் கண்டுபிடித்தார். அவர் இவற்றை முதலில் பார்த்த போது பொருள்கள் வழக்கமான வடிவத்தில் நகர்வதை உணர்ந்து இவற்றை நட்சத்திரங்களின் குழு என்று நினைத்தார்.
இந்த பொருள்கள் அந்தக்காலத்தின் புரிதலின்படி தவறான திசையில் நகர்ந்தன. சில வாரங்களுக்குப் பிறகு, தான் கண்டறிந்தவை நட்சத்திரங்கள் அல்ல
என்பதையும், அவை வியாழன் கோளின் சுற்றுப்பாதையில் உள்ள பொருட்கள் என்றும்
தீர்மானித்தார். வியாழன் கோளின் நான்கு பெரிய துணைக்கோள்களே அவை என்பதை முடிவு செய்தார்.
நவீன வானியல் வளர்ச்சிக்கு
வழி வகுத்த கலிலியோ
பின்னாளில் கோப்பர்நிக்கஸ் பிரபஞ்சத்தைப்
பற்றிய புரிதலுக்கான ஆதாரத்தை கலிலியோவின் கண்டுபிடிப்பு வழங்கியது.
பொதுவாக இருக்கும் அனைத்தும் உண்மையில் பூமியைச் சுற்றி வரவில்லை. சூரியனைத்தான் சுற்றி வருகிறது என்ற அடிப்படை உண்மைக்கு ஆதாரமாக இருந்த கண்டுபிடிப்பு இதுதான்.
அவரது கண்டுபிடிப்புகள்
நவீன வானியல் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
வாழ்நாள் முழுவதும் வீட்டுக்காவலில் வைத்து தண்டனை
கத்தோலிக்கத் திருச்சபை அன்றும் இன்றும்
கலிலியோ தனது கண்டுபிடிப்பை விளக்கும் வகையில் கத்தோலிக்கத் திருச்சபையின் இரண்டு கார்டினல்களுக்கு பூமியின் நிலப்பரப்பையும், வியாழனின்
நிலவுகளையும் தனது தொலைநோக்கியின் வழியாக காண்பித்து விளக்குகிறார். ஆனாலும் கத்தோலிக்கத் திருச்சபை
பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கருத்தை ஏற்க மறுத்து கலிலியோவை “மதக்கருத்தைக் கடுமையாக சந்தேகிக்கிறார்” என்று முடிவு செய்து அவரை வாழ்நாள் முழுவதும் வீட்டுக்காவலில் வைத்து
தண்டனை அளித்தனர்.
கத்தோலிக்கத் திருச்பை ஏற்பு
தற்போது கத்தோலிக்கத் திருச்சபையின் போப்பாண்டவர் கலிலியோவிற்கு
வழங்கிய தண்டனை தவறானது என்றும்,
பூமி சூரியனையே சுற்றி வருகிறது என்றும் ஏற்றுக் கொண்டனர்.