கிறிஸ்துவ உபதேசியார்கள் மற்றும்
பணியாளர்கள் நல வாரியம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிறிஸ்துவ உபதேசியார்கள் மற்றும்
பணியாளர்கள் நல வாரியத்தில்
உறுப்பினர் சேர்க்கை மற்றும்
வாரியத்தின் சார்பாக செயல்படும்
நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
கிறிஸ்துவ உபதேசியார்கள் மற்றும்
பணியாளர்கள் நல வாரிய தலைவர்
டாக்டர்.விஜிலா சத்தியானந்த்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி. பிப். 20. –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக,
கிறிஸ்துவ உபதேசியார்கள் மற்றும்
பணியாளர்கள் நல வாரியத்தில்
உறுப்பினர் சேர்க்கை மற்றும்
வாரியத்தின் சார்பாக செயல்படும்
நலத்திட்டங்கள் குறித்து
விழிப்புணர்வு கூட்டம்
கிறிஸ்துவ உபதேசியார்கள் மற்றும்
பணியாளர்கள் நல வாரிய தலைவர்
டாக்டர்.விஜிலாசத்தியானந்த்
மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
ஆகியோர் தலைமையில்,
நல வாரிய உறுப்பினர்கள்
திருமதி.ரோஸ்லின் ஜீவா,
திரு.இமானுவேல்
ஆகியோர் முன்னிலையில்
(20.02.2026) நடைபெற்றது.
கிறிஸ்துவ உபதேசியார்கள்
மற்றும்
பணியாளர்கள்
நல வாரிய தலைவர்
டாக்டர்.விஜிலாசத்தியானந்த்
அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்,
சிறுபான்மையினர் நலனை பாதுகாத்திட
சிறுபான்மையினருடைய கல்வி,
பொருளாதார சமூக மேம்பாட்டிற்காக
பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
கிறிஸ்துவ உபதேசியார்கள்,
போதகர்கள்,
சீசர்கள்,
பாடகர்கள்,
வேதியர்கள்,
பணியாளர்கள்,
தேவாலயத்தின் காவல் காப்போர்,
சுத்தம் செய்வோர்,
கிறிஸ்துவ கல்லறை தோட்டங்களில்
பணிபுரியும் ஊழியர்கள்,
கிறிஸ்துவ ஆதரவற்றோர் இல்லங்களில் பணிபுரியும் ஊழியர்கள்,
தொழுநோயாளிகளின் இல்லங்களில் பணிபுரிகின்ற ஊழியர்களுக்கான
வாரிய கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தியாவிலேயே முதல் முறைாக
கிறிஸ்துவ உபதேசியார்கள் மற்றும்
பணியாளர்களுக்கு
என்றே ஒரு வாரியம்
அமைக்க வேண்டும் என
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்
2023 ஆம் ஆண்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கிறிஸ்துவ உபதேசியார்கள் மற்றும்
பணியாளர்கள் நல வாரிய
உறுப்பினராக பதிவு செய்யும் நபர்
18 வயது பூர்த்தி செய்து
60 வயதிற்குள் உள்ளவராகவும்,
கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவராகவும்,
குறைந்தது 7 வருடம் தேவாலயங்களில்
பணிபுரிகின்ற அல்லது
சேவையாற்றுகின்றவாரக
இருக்க வேண்டும்.
நல வாரிய உறுப்பினர் அட்டை
பெற்ற பிறகு அவர்களுக்கான
நலத்திட்ட உதவிகள்
கல்வித்தொகை,
திருமண உதவித்தொகை,
மகப்பேறு உதவித்தொகை
மாதம் தலா ரூ.1000 வீதம்
ஆறு மாதம் ரூ.6000-மும்,
அதேபோல் விடுதியோடு கூடிய
உயர்கல்விக்கு ரூ.8000 -மும்,
விபத்து காப்பீடு ரூ.1,25,000-மும்,
விபத்தில் ஊனம் ஏற்பட்டால்
ரூ.10,000 முதல் ரூ.1,00,000 -மும்,
இயற்கை மரணத்திற்கு ரூ.30,000 என
பல்வேறு நலத்திட்டங்கள்
வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல முதியோர் ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.1200 வழங்கப்படுகிறது.
மேலும்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்
உலமாக்களுக்கு
ஓய்வூதியமாக ரூ.5000-மும்,
50 சதவிகித மானியத்துடன் கூடிய
இரண்டு சக்கர வாகனத்திற்கும்
ஒப்புதல் வழங்கியுள்ளார்கள்.
மேலும்,
1989 ஆம் ஆண்டு
முத்தமிழ் அறிஞர்
டாக்டர் கலைஞர்
அவர்கள்
முதலமைச்சராக இருந்தபோது
முதல் முறையாக
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்
ஆணையம் அமைக்கப்பட்டது.
அதன் பின்னர்
1999 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட,
மிகவும் பிற்படுத்தப்பட்ட,
சிறுபான்மையினர் நலனுக்காக
தனி அமைச்சகம் அமைக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்
கிறிஸ்துவ மகளிருக்காக அவர்களின்
வாழ்வாதாரத்திற்காக
மோட்டார் தையல் இயந்திரம்
திட்டத்தின் மூலம்
மோட்டார் தையல் இயந்திரம்
வழங்கி வருகிறார்.
மேலும்,
அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல்
6 ஆம் வகுப்பு வரை படிக்கும்
குழந்தைகளுக்கு
சிறுபான்மையினர்
பெண் குழந்தை திட்டம்
மூலம் ஊக்கத்தொகை
வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்
கிறிஸ்துவ தேவாலயங்களில்
பழுது பார்த்தல்
மற்றும்
புனரமைத்தல் பணிகள்
மேற்கொள்வதற்காக நிதியுதவி
அளிக்கும் திட்டத்தின் கீழ்
10 ஆண்டு முதல் 15 ஆண்டு வரை உள்ள தேவாலயங்கள் புனரமைத்தல் பணிகளுக்கு
ரூ.10 லட்சமும்,
15 ஆண்டு முதல் 20 ஆண்டு வரை உள்ள தேவாலயங்கள் புனரமைத்தல் பணிகளுக்கு
ரூ.15 லட்சமும்,
20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தேவாலயங்கள் புனரமைத்தல் பணிகளுக்கு
ரூ.20 லட்சம்
வரை வழங்கி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களை பழுது பார்ப்பதற்காக விண்ணப்பித்து பயனடையலாம்.
எனவே,
கிறிஸ்துவ உபதேசியார்கள் மற்றும்
பணியாளர்கள்
சிறுபான்மையினருக்கான
பல்வேறு திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என
கிறிஸ்துவ உபதேசியார்கள் மற்றும்
பணியாளர்கள் நல வாரிய தலைவர்
டாக்டர்.விஜிலாசத்தியானந்த்
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
கிறிஸ்துவ உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய தலைவர்
மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
ஆகியோர் கிறிஸ்துவ தேவாலயங்களில்
பணிபுரியும்
20 உபதேசியார்கள்
மற்றும் பணியாளர்களுக்கு
நல வாரிய அட்டைகளை
வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில்,
துணை ஆட்சியர் (பயிற்சி)
செல்வி.க்ரிதி காம்னா இ.ஆ.ப.,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்
திருமதி.பத்மலதா,
கிறிஸ்துவ உபதேசியார்கள்,
பணியாளர்கள் மற்றும்
துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
---------------------------------------.