கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் சிப்காட் குருபரபள்ளி தொழில் பூங்கா
டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்
2 புதிய விரிவாக்க திட்டங்களுக்கு
அடிக்கல் நாட்டு விழா
மேம்படுத்தப்பட்ட புதிய உற்பத்தி வரிசை
தொடக்க விழா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின்
பங்கேற்பு
ஓசூர். செப்டம்பர். 11. –
டெல்டா எலக்ட்ரானிக்ஸ்
இந்தியா பிரைவேட் லிமிடெட்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் குருபரபள்ளி தொழிற் பூங்காவில் உள்ள
டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்
2 புதிய விரிவாக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா
மற்றும்
மேம்படுத்தப்பட்ட புதிய உற்பத்தி வரிசை தொடக்க விழாவும்
செப்டம்பர் 11-ம் தேதியன்று நடைபெற்றது.
இந்த விழாவில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின்
அவர்கள் பங்கேற்று
டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின்
2 புதிய விரிவாக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, மேம்படுத்தப்பட்ட புதிய உற்பத்தி வரிசையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
முதலமைச்சர் உரை...
விழாவில் கலந்து கொண்டிருக்கக்கூடிய
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்
திரு. சக்கரபாணி
அவர்களே,
திரு. டி.ஆர்.பி. ராஜா
அவர்களே,
நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. கோபிநாத்
அவர்களே,
சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு. மதியழகன்
அவர்களே,
திரு. பிரகாஷ்
அவர்களே,
திரு. ராமச்சந்திரன்
அவர்களே,
செயலாளர்
திரு. அருண் ராய், இ.ஆ.ப.,
அவர்களே,
வழிகாட்டி நிறுனத்தின் மேலாண்மை இயக்குநர்
திரு. தாரேஸ் அகமது, இ.ஆ.ப.,
அவர்களே,
சிப்காட் மேலாண்மை இயக்குநர்
திரு. செந்தில் ராஜ், இ.ஆ.ப.,
அவர்களே,
மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு. தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்களே,
டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர்
திரு. பிங்க் செங்
அவர்களே,
நிறுவனத்தின் தாய்லாந்து தலைவர்
திரு. ஜேம்ஸ்
அவர்களே,
தைவான் துணைத் தலைவர்
திரு. மார்க் கோ
அவர்களே,
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே,
அரசு உயர் அலுவலர்களே,
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச்சார்ந்த நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இன்று காலையில்,
முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு,
இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் வந்திருக்கிறோம்.
திரு. பிங்க் செங் அவர்களே! எலக்ட்ரானிக்ஸ் துறையில், உங்களின் அளப்பரிய பங்களிப்பால், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்,
உலகளவில் முன்னணி நிறுவனமாக உயர்ந்திருக்கிறது.
இந்த வெற்றிச் சாதனைக்கு முதலில் என்னுடைய
வாழ்த்துகளையும்!
பாராட்டுகளையும்!
நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஓசூர் பகுதியின் தொழில்வளர்ச்சியில்,
டெல்டா எலக்ட்ரானிக்ஸ் அளிக்கும் பங்களிப்புக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்!
இப்படிப்பட்ட உங்கள் கம்பெனியின்,
New Delta Smart Manufacturing Unit
தொடங்கப்படுவதும் – புதிய விரிவாக்கமும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது!
இந்தியாவின் முன்னணி
Electronics Production and Export
மையமாக தமிழ்நாடு விளங்குகிறது.
டெல்டா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையேயான நம்முடைய கூட்டுமுயற்சி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்த நேரத்தில் உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது, இதன் அடுத்தகட்டமாக, தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களிலும் உங்களின் விரிவாக்க திட்டங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல,
தமிழ்நாட்டின் திறன்வளத்தை கருத்தில் கொண்டு, ஒரு R&D Centre-யை நீங்கள் சென்னையிலும், கோவையிலும் அமைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் நீங்கள் மேற்கொள்ளும் தொழில் முயற்சிகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் எங்கள்
திராவிட மாடல் அரசு
முழுமையாக வழங்கும் என்று உறுதியளித்து
இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி! வணக்கம்!.
இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
தொடர்ந்து டெல்டா எலக்ட்ரானிக்ஸ்
நிறுவனத்தை பார்வையிட்டார்.
------------------------------------------------------.