கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சி
முல்லைநகர் அரசு மேல்நிலைப்பள்ளி
ஆண்டு விழா
எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு
ஓசூர். பிப். 27. –
ஓசூர் முல்லைநகர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சி,
ராயக்கோட்டை சாலையில்
முல்லைநகர்அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
தரமான கல்வி
இந்த அரசுப்பள்ளியில் 6-வது வகுப்பு முதல் 12-வது வகுப்பு வரை 1980 மாணவ, மாணவிகள் நல்லொழுக்கத்துடன், தரமான கல்வி பயின்று வருகின்றனர்.
ஒரு தலைமையாசிரியர் உட்பட 65 ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் உள்ளனர்.
இங்கு பயிலும் மாணவ,மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
என்.எஸ்.எஸ்.
இந்தப்பள்ளியில் 2019-ம் ஆண்டில் நாட்டு நலப்பணித்திட்டம்(NSS) தொடங்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த அரசுப்பள்ளியின் ஆண்டு விழா பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர்
முனைவர். க. காந்தி தலைமை வகித்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோ.மகேஷ்பாபு அனைவரையும் வரவேற்றார்.
சிறப்புரை
இந்த ஆண்டு விழாவில்
சிறப்பு விருந்தினர்களாக
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர்,
எம்எல்ஏ. Y. பிரகாஷ்,
ஓசூர் மாநகர செயலாளர்,
ஓசூர் மேயர் S.A. சத்யா,
ஓசூர் மாநகராட்சி துணை மேயர், ஆனந்தய்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு பகுதி அவைத்தலைவர் E.G.நாகராஜ்,
மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல்,
மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் இக்ரம்,
பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முருகன், சங்கரநாராயண,ன் அருளரசன்,
கே.செல்வம், S.பாஸ்கர், ராஜேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பரிசுகள்
ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
கலை நிகழ்ச்சிகள்
தொடர்ந்து மாணவ. மாணவிகள் பங்கேற்ற நாட்டியம், நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இறுதியாக பள்ளி உதவி தலைமையாசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.
இந்த ஆண்டு விழாவில் NSS திட்ட அலுவலர் மாரியப்பா, உதவி திட்ட அலுவலர் சி.சங்கர், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
---------------------------------------------------.