ஓசூர் மாநகராட்சி 37-வது வார்டு
மிடுகரப்பள்ளி
மாநகர திமுக சார்பில்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா முன்னிட்டு
இலவச மருத்துவ முகாம்
எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு
ஓசூர். டிச. 01. –
by Jothi Ravisugumar
ஓசூர் மிடுகரப்பள்ளியில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா முன்னிட்டு நடந்த இலவச மருத்துவ முகாமில் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு
உட்பட்ட 37-வது வார்டு, மிடுகரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி அருகே மாநகர திமுக சார்பில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 37-வது வார்டு கவுன்சிலர் சென்னீரப்பா, அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் பங்கேற்று இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.
ஓசூர் வரம் மருத்துவமனை, இயக்குநர்
டாக்டர்.பிரியதர்ஷினி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்று சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில் குழந்தையின்மைக்கான
ஆலோசனை, இருதய பிரச்சனைகள்,
எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகள்,
கர்பப்பை கட்டிகள், கர்பப்பை கோளாறுகள், குடல் இறக்கம், மூலம், பித்தப்பை கல்,
விரை வீக்கம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு
உடல் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள்
பங்கேற்றனர்.