கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
“எஸ்.ஐ.ஆர் ஆரம்பத்திலேயே
தோல்வி அடைந்து விட்டது -
கூட்டணி பலத்தை விட
எங்கள் மீது தமிழக மக்கள் வைத்துள்ள
நம்பிக்கை காரணமாக,
தேர்தலில் நாங்கள்
அமோக வெற்றி பெறுவோம்”
---
மு. வீரபாண்டியன்.
மாநிலச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
ஓசூர். நவ. 10. –
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்,
நவம்பர் புரட்சி
எனப்படும்
ரஷ்ய புரட்சி தினம்
கடைபிடிக்கப்பட்டது.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
செம்படை பேரணி
தளி சட்டமன்ற உறுப்பினரும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
சட்டமன்ற கட்சி தலைவருமான
டி. ராமச்சந்திரன் MLA
தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச் செயலாளர்
மு.வீரபாண்டியன்,
அகில இந்திய செயலாளர்
ராமகிருஷ்ணா,
மாநிலத் துணைச் செயலாளர்
ரவி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
நிர்வாக குழு உறுப்பினர்
எம் இலகுமையா
ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
நகரின் பிரதான சாலைகளில் பேரணி
தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து புறப்பட்ட செம்படை பேரணியானது நகரின் பிரதான சாலைகள் வழியாக சென்று பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு இருந்த பொதுக்கூட்ட மேடையை அடைந்தது
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரஷ்யாவில் 1917 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி ரஷ்ய அதிபர் லெனின் தலைமையிலான
மாபெரும் புரட்சி நடைபெற்றது.
அதனை நினைவு கூறும் விதமாக உயிர் தியாகம் செய்த தலைவர்களின் வரலாற்றை பற்றி பேசினார்கள்.
கூட்டத்திற்குப் பின்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச் செயலாளர்
மு. வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
எஸ்.ஐ.ஆர்- யை நாங்கள் ஏற்கவில்லை.
ஆரம்பத்திலேயே எஸ்.ஐ.ஆர் தோல்வி அடைந்து விட்டது. தமிழக முதலமைச்சர் மற்றும் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் அவசரகதியில் எஸ்.ஐ.ஆர் புகுத்தும் நடவடிக்கை ஏற்புடையதல்ல.
இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
நீதிமன்றம் வழிகாட்டி உள்ளது போல பேரணிகள் நடத்தினால் காப்புத்தொகை கட்ட வேண்டும் என, ஐந்திலிருந்து 10,000 பேர் கூடும் பொழுது அதற்கு ரூ.20 லட்சம் காப்பு தொகை கட்ட வேண்டும்.
இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை,
பல கட்சி இயக்கங்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுவிடும்.
எனவே இதிலும் எங்களுக்கு எந்த உடன்பாடும் இல்லை.
உடனடியாக இதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக முதல்வர் தலைமையிலான எங்களது கூட்டணி வலுவாகவும் உறுதியாகவும் இருக்கிறது.
கூட்டணி மட்டுமல்ல தமிழக மக்களும் உறுதியாக இருக்கிறார்கள்.
தமிழக மக்களைப் பொறுத்தவரை பிளவு கருத்துக்களை ஏற்க மாட்டார்கள்.
ஜாதியால் மதங்களால் பிளவு படுத்துகின்ற எந்த கருத்தையும் ஏற்கமாட்டார்கள்.
திமுக கூட்டணி நாட்டின் ஜனநாயகத்தை காப்பதோடு ஒற்றுமை கூட்டணி அரசியல் சாசனத்தை பாதுகாக்கின்ற கூட்டணி கொள்கை அளவில் உறுதியாக இருப்பது போல் தமிழக மக்களும் இருக்கின்றனர்.
அவர்கள் எப்பொழுதுமே நல்லிணக்கத்திற்கு ஆதரவளிப்பவர்கள்.
எனவே கூட்டணி பலத்தை விட தமிழக மக்கள் எங்கள் மீது வைத்துக் கொண்டிருக்கிற மற்றும் நம்பிக்கையும் பலமாக இருக்கிறது.
ஆகவே தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
எதிரணிகள் எல்லோரும் தனித்தனியாக இருக்கிறார்கள்.
அவர்கள் சேர்ந்து வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
கூட்டணி பலத்தை விட தமிழக மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
தமிழக மக்கள் எப்பொழுதும் ஒற்றுமை கருத்தை விரும்புவார்கள்.
நாடு ஒன்றுபட்டு இருக்க வேண்டும் பிளவு பட்டுவிடக் கூடாது பதற்றம் கூடாது என்று விரும்புகிற தமிழக மக்கள் எங்களோடு இருப்பது எங்களது கூடுதல் பலம். எனவே வருகிற தேர்தலில் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனையில் முதல்வர் தலையிடுகிறாரா இல்லையா என்பதுதான்.
கரூர் துவங்கி கோவை நிகழ்வு வரை தமிழக முதல்வர்
உடனடியாக தலையீடு செய்கிறார்,
அதிகாரிகளை இயக்குகிறார்.
சட்டத்தின் முன்பு குற்றவாளிகளை கொண்டு வந்து நிறுத்துகிறார்.
நீதி விசாரணைக்கு உத்தரவிடுகிறார்.
அரசு எப்பொழுதுமே நீதியின்பால் சட்டத்தின்பால் நிற்கிறது. எனவே முதல்வரின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஆதரிக்கிறோம்.... என்று அவர் தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
அகில இந்திய செயலாளர்
ராமகிருஷ்ணா
மாநில செயலாளர்
மு. வீரபாண்டியன்
துணை செயலாளர்
ரவி
மாநில நிர்வாக குழு உறுப்பினர்
இலகுமய்யா
மாநில குழு உறுப்பினர்
சௌந்தரவல்லி சின்னசாமி,
பழனி ராமமூர்த்தி
மாதையன்
கோவிந்த நாயக்
மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பூதட்டியப்பா சாம்ராஜ் மற்றும் பல்வேறு கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்களும் பொதுமக்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
---------------------------------.