என்.டி.ஆர். 29-வது நினைவு தினம்
அனுசரிப்பு
ஓசூர். ஜனவரி. 19. –
ஓசூர் மாநகராட்சியில் கம்மா பவனம்,
புக்கசாகரம்,
தொம்மசந்திரா ஆகிய பல இடங்களில் ஆந்திராபிரதேசம்
மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆர்.
29-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கம்மா பவனம்
என்டிஆர் 29-வது நினைவு தினத்தை முன்னிட்டு
என்டிஆர் ரசிகர்கள் மற்றும் என்பிகே ரசிகர்கள் சார்பில், ஓசூர் காமராஜர் காலனியில் உள்ள
கம்மா பவனத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கம்மா பிரகதி சங்க தலைவர் தியோட்டர் கோபால் தலைமையில் கம்மா பவனம் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள என்டிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் மாரசந்திரம் ஃபோர்ஸ் உரிமையாளர் ராமசாமி, முன்னாள் ஊராட்சி தலைவரும், சூளகிரி ஒன்றிய கவுன்சிலருமான சந்திரசேகர், லோகேஷ்,
ஸ்ரீராம் மற்றும் என்டிஆர். ரசிகர்கள், என்பிகே ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புக்கசாகரம்
என்டிஆர் இண்டர்நேஷனல் பள்ளி
ஓசூர் தாலுகாவில் உள்ள புக்கசாகரம் கிராமத்தில்
பெங்களுரு மாவட்ட முன்னாள் கலெக்டர் கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி பத்மாவதி அவர்களால்
என்.டி.ஆர். இண்டர்நேஷனல் பள்ளி நிறுவப்பட்டுள்ளது. இந்த பள்ளியில்
நிறுவனர் உத்தரவின்படி,
என்டிஆரின் 29-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள என்டிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
என்டிஆர் நினைவு தினம் முன்னிட்டு
ஏழை எளிய
மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் முனுசாமி, யஸ்வந்த் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர்.
தொம்மசந்திரா
இண்டியா இண்டர்நேஷனல் பள்ளி
பெங்களுரு தொம்மசந்திரா அருகில் இயங்கி வரும்
இந்தியா இண்டர்நேஷனல் பள்ளியில் என்டிஆர் 29-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள
என்டிஆர் சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில்
ஜெயபால், சோமசேகர் தலைமையில் பள்ளி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.