ஓசூரில் மேற்கு மாவட்ட
திமுக சார்பில்
சட்டமேதை அம்பேத்கரை
அவமதித்த
மத்திய உள்துறை
அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து
ஆர்ப்பாட்டம்
ஓசூர். டிச. 20. –
ஓசூரில் மேற்கு மாவட்ட திமுக சார்பில்
சட்ட மேதை அம்பேத்கரை அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ஓய்.பிரகாஷ்
ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ஓய்.பிரகாஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்றத்தில் சட்டமேதை அம்பேத்கர் அவர்களை அவமதித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், மன்னிப்புக் கேட்க வேண்டும், பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேயர் எஸ்.ஏ.சத்யா,
இதில் மேற்கு மாவட்ட துணைச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான
பி.முருகன், மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமாறன்,
தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், தனலட்சுமி, மாநகர பொது சுகாதார குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், மாநகர வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சென்னீரப்பா, பகுதி செயலாளர்கள் ராமு, வெங்கடேஷ், கே.டி.திம்மராஜ்,
மாநகர நிர்வாகிகள் செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன், ரவிக்குமார், அணிகளின் அமைப்பாளர்கள் சுமன், கண்ணன், ராஜா, சக்திவேல்
பொன்ராம் சத்யா, கலைச்செழியன், இக்ரம் அகமத் மற்றும் திமுக கவுன்சிலர்கள், மற்றும் இளைஞர் அணியினர், மாணவர் அணியினர், மகளிர் அணியினர் உட்பட 500-க்கும் மேற்பட்ட மாவட்ட வட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.