நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள் இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்
- சுவாமி விவேகானந்தர்
ஜனவரி – 12 -
சுவாமி
விவேகானந்தரின்
162-வது பிறந்த தினம் -
தேசிய இளைஞர்கள் தினம்
“நாம் முதலில்
வணங்க வேண்டிய கடவுளர்கள்
சக மனிதர்களே!
பொறாமைப்பட்டு ஒருவரோடு ஒருவர் சண்டையிடாமல் சக மனிதர்களை தொழுதிட வேண்டும்”
-- சுவாமி விவேகானந்தர்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்
ஓசூர். ஜனவரி. 12. –
தேசிய இளைஞர்கள் தினம் சுவாமி
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ம் தேதி
கோல்கத்தாவில் பிறந்தார். துடிப்பான இளமை காலத்தில்தான் உங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும், நரை எய்த பின்பு அல்ல என்று இளைஞர்கள் மீது நம்பிக்கை கொண்டவர் விவேகானந்தர்.
நமது நாட்டின் எதிர்காலம் இன்றைய இளைஞர்கள் கைகளில் இளைஞர்கள் முன்னேற்றம் நமது நாட்டின் முன்னேற்றம் என்று கூறியவர் சுவாமி விவேகானந்தர். அவரது பிறந்த தினமே தேசிய இளைஞர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள் இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்
செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து அதிலிருந்து நற்செயல்கள் விளையும் என்று கூறியவர் விவேகானந்தர்.
நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள் இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன் என்றவர் விவேகானந்தர். இதிலிருந்தே அவர் இளைஞர்கள் மீது எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தார் என்பது தெளிவாகிறது.
சிகாகோ மாநாட்டில் உரை இவரது பிறந்தநாளை
தேசிய இளைஞர் நாளாக
இந்திய அரசு 1984-ல் அறிவித்தது. அமெரிக்காவில் நடந்த சிகாகோ மாநாட்டில் சகோதர சகோதரிகளே என்று அவர் தொடங்கிய உரை இன்றளவும் பேசு பொருளாக உள்ளது.
நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள் நான் இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன் என்று கூறிய விவேகானந்தரிடமிருந்து ஆன்மிகத்தை கடந்து உடல் ஆரோக்கியம், சமூகப் பொறுப்பு, அறிவுத்திறன் மேம்பாடு என இளைஞர்கள் அறிய பல அரிய கருத்துகள் உண்டு.
சமூகப் பொறுப்போடு செயல்படு!
சமூகப் பணிகளைச் செய்வது என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தனி மனிதர்களின் வளர்ச்சிக்கும் முக்கியத் தேவையாகக் கருதினார் விவேகானந்தர்.
“நாம் முதலில் வணங்க வேண்டிய கடவுளர்கள் சக மனிதர்களே!
பொறாமைப்பட்டு ஒருவரோடு ஒருவர் சண்டையிடாமல் சக மனிதர்களை தொழுதிட வேண்டும்” என்றார்.
அவர் சுட்டிக்காட்டும் சக மனிதர்கள் ஒடுக்கப்பட்ட மக்களும் சாமானியர்களும்தான். சொல்லப்போனால், சமூக சேவைகளை முன்னெடுத்துச் செல்ல வலியுறுத்தித் தொடர்ந்து அவர் மக்களிடம் பேசினார்.
விவேகானந்தர் கல்வி
சிந்தனைகள்
• கல்வி என்றால் என்ன? அது புத்தகங்களைப் படிப்பதா? இல்லை அல்லது அது பலவிதமானவற்றைக் குறித்த அறிவா? அதுவும் இல்லை. எத்தகைய பயிற்சியின் மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, பயன் தரும் வகையில் அமைகிறதோ, அந்தப் பயிற்சிதான் கல்வியாகும்.
• கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல.
அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணமாகாமல் உனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.
• எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.
அன்புதான் வாழ்க்கை • அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. வளர்ச்சியடைவதுதான் வாழ்க்கை , அதாவது விரிவடைதல். அதுதான் அன்பாகும். எனவே அன்புதான் வாழ்க்கை ஆகும். அன்பு ஒன்றுதான் வாழ்க்கையின் ஒரே நியதியாகும். எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான்.
......................................