கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் காவல் நிலையம்
ஓய்வு பெற்ற சிறப்பு காவல்
உதவி ஆய்வாளர் சென்னியப்பனுக்கு
காவல்துறை சார்பில் பிரியாவிடை
மற்றும் பாராட்டு விழா
ஓசூர். ஜுலை. 1. –
கெலமங்கலம் காவல் நிலையத்தில்
காவல் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்
திரு. சென்னியப்பன்
அவர்களுக்கு பிரியாவிடை மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு
தேன்கனிக்கோட்டை
டிஎஸ்பி ஆனந்தராஜ்
தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
இன்ஸ்பெக்டர் பெரிய தம்பி,
இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார்,
இன்ஸ்பெக்டர் பங்கஜம்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் காவல் பணியில்
இருந்து ஓய்வு பெறு்றுள்ள
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்
திரு. சென்னியப்பன்
அவர்கள் காவல் துறையில் ஆற்றிய
சேவையை பாராட்டி
பொன்னாடை
மற்றும் சந்தன மாலை அணிவித்து
நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்ற அனைவரும்
திரு. சென்னியப்பன் சாதனைகளை
பற்றி பாராட்டி புகழ்ந்து பேசி உரையாற்றினார்கள்.
மேலும் பல்லாண்டு குடும்பத்தோடு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டார்கள்.
இனி வரும் காலங்களில்
அவர் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்துடனும் குடும்பத்துடன் நலமாக வாழ வேண்டும்
என்றும் வாழ்த்தினார்கள்.
இந்த விழாவில்
ராயக்கோட்டை,
உத்தனபள்ளி,
தளி,
அஞ்செட்டி
ஆகிய காவல் நிலையங்களில் இருந்து காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கினார்கள்.
விழா ஏற்பாடுகளை
கெலமங்கலம் எஸ்ஐ சிற்றரசு
எஸ் எஸ் ஐ நாகராஜன்,
சுப்பிரமணி,
மாரியப்பன்
மற்றும் காவல் நிலைய அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.