கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம்
அரசு மேல்நிலைப்பள்ளியில்
12-வது வகுப்பு பொதுத்தேர்வில்
92 சதவீதம் தேர்ச்சி பெற்று
சாதனை படைத்த மாணவர்கள்
தலைமையாசிரியர் பாராட்டு
ஓசூர். மே. 8. –
கெலமங்கலம் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 12-வது வகுப்பு பொதுத்தேர்வில்
92 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் நகரில், தேன்கனிக்கோட்டை சாலையில்
அரசு மேல்நிலைப்பள்ளி
இயங்கி வருகிறது.
மாணவி எஸ். ஜீவிதா (600 - 546)
பள்ளியளவில் முதலிடம்
இந்த அரசுமேல்நிலைப்பள்ளியில்
12-வது வகுப்பில் 224 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
தரமான கல்வி
இங்கு
தலைமையாசிரியர்
மாதேஷ்,
உதவி தலைமையாசிரியர்
சுப்பிரமணி
உட்பட மொத்தம் 20 பட்டதாரி ஆசிரியர்கள் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு, நல்லொழுக்கத்துடன், தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில்
2024 – 25-ம் கல்வி ஆண்டுக்கான
12-வது வகுப்பு பொதுத்தேர்வுகள்
மார்ச் மாதம் நடைபெற்றது.
92 சதவீதம் தேர்ச்சி
இந்த பொதுத்தேர்வில் 224 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.
இந்த தேர்வுகளின் முடிவு மே மாதம் 8-ம் தேதி வெளியானது.
இதில் கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி
மாணவ, மாணவிகள் 92 சதவீதம்
தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
12-வது வகுப்பு பொதுத்தேர்வில்
கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த
மாணவி எஸ். ஜீவிதா – 600-க்கு - 546 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மாணவி எஸ். சங்கீதா – 600-க்கு – 533 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மாணவர் எம். தார்னீஷ் – 600-க்கு – 523 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில்
மூன்றாம் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
நான்காவது இடம்
மாணவி எஸ்.ஜெயஸ்ரீ – 600-க்கு – 508 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
5-வது இடம்
மாணவி வி. பாவனா – 600-க்கு – 502 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி.
12-வது வகுப்பு தேர்வு எழுதிய
மொத்தம் 224 மாணவ,
மாணவிகளில்,
206 பேர் தேர்ச்சி (92 சதவீதம்) பெற்றுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு
12-வது வகுப்பு தேர்வில்,
90 சதவீதத்தைக் கடந்து
தேர்ச்சி பெற்று மாணவ,
மாணவிகள் சாதனை
படைத்துள்ளனர்.
12-வது வகுப்பு தேர்வில் - அறிவியல் குருப் பயிலும் மொத்தம் 118 மாணவ, மாணவிகளில், 114 பேர் தேர்ச்சி (96.6 சதவீதம்) பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2024-25-ம் கல்வியாண்டில் 12-வது வகுப்பு பொதுத் தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி பெற்று கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை
தலைமையாசிரியர்
மாதேஷ்,
உதவி தலைமையாசிரியர்
சுப்பிரமணி,
பட்டதாரி ஆசிரியர்
பார்த்தீபன்
மற்றும்
பட்டதாரி ஆசிரியர்கள்,
பெற்றோர் ஆகியோர்
பாராட்டி, வாழ்த்தினார்கள்.
---------------------------------.