வெனேரா என்பது வெள்ளி கோளை ஆராய்வதற்காக 1961 முதல் 1984 வரை சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட விண்கலங்கள்
மே – 19 - 1961 –
சோவியத்தின் வெனேரா 1 விண்ணூர்தி வெள்ளிக் கோளைக் கடந்த தினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மே. 19. -
பூமியை விட வேறொரு கோளைக் கடந்த முதலாவது விண்ணூர்தி இதுவாகும்.
வெனேரா என்பது வெள்ளி கோளை ஆராய்வதற்காக 1961 முதல் 1984 வரை சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட விண்கலங்கள் ஆகும்.
வெனேரா என்றால் ருசிய மொழியில் வெள்ளி என்ற பொருள்படும். இது வெள்ளி கோளை பற்றிய ஆய்வுத் திட்டமாகும்.
விண்கலங்களில் வெனேரா 3 வேறொரு கோளில் மோதிய முதலாவது விண்கலமாகும். இது மார்ச் 1, 1966-ல் வெள்ளியில் மோதியது.
வெனேரா 4 வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது மனிதானால் உருவாக்கப்பட்ட விண்கலம் ஆகும்.
இது அக்டோபர், 1967 இல் வீனசின் மண்டலத்தினுள் நுழைந்தது.
வெனேரா 7 வேறொரு கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும்.
இது டிசம்பர் 15, 1970) இல் வீனசில் தரையிறங்கியது.
வெனேரா 9 மேற்பரப்பின் படங்களை ஜூன் 8, 1975 இல் பூமிக்கு அனுப்பியது.
வெனேரா 15 ஜூன் 2, 1983-ல் வீனசில் பல ஆய்வுகளை மேற்கொண்டது.
மொத்தத்தில் இத்திட்டம் சோவியத் விண்வெளி ஆய்வுத்திட்டத்துக்கு மிகப் பெரும் வெற்றியாக அமைந்தது.
ஆனால், இக்கலங்கள் நீண்ட காலத்துக்கு இவை இயங்க முடியாமல் போயின.
--------------------------------.