கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சி
டைட்டான் சிஎஸ்ஆர். சார்பில்
ஒசூர் தூய்மை பணியாளர்களுக்கு
நன்றி அறிவிப்பு விழா
800 சுகாதாரக்கிட்கள் வழங்கி பாராட்டு
ஒசூர் எம்எல்ஏ
திரு. ஒய்.பிரகாஷ்
பங்கேற்பு
ஒசூர். பிப். 11. –
ஒசூர் தூய்மை பணியாளர்களுக்கு
நன்றி அறிவிப்பு விழா
ஒசூர் மாநகராட்சியில் பணியாற்றிவரும்
தூய்மை பணியாளர்களின்
அர்ப்பணிப்பு மற்றும்
சேவையை பாராட்டி
டைட்டான் நிறுவனம்
சிஎஸ்ஆர் சார்பில்
நன்றி அறிவிப்பு விழா
சிறப்பாக நடைபெற்றது.
ஓசூர் ரயில்நிலைய சாலையில் உள்ள
மீரா மஹாலில் நடந்த இந்த விழாவில்
சிறப்பு விருந்தினர்களாக
ஒசூர் எம்எல்ஏ
திரு. ஒய்.பிரகாஷ்
மாநகராட்சி ஆணையாளர்
திரு. சபீர் ஆலம். IAS.
துணைமேயர்
திரு. ஆனந்தய்யா.
மாநகர பொது சுகாதாரக்
குழு தலைவர்
திரு. N.S. மாதேஸ்வரன்,
டைட்டான் சிஎஸ்ஆர். தலைவர்
திரு.J.J. டோமினிக்
ஆகியோர் பங்கேற்று
சிறப்புரையாற்றினார்கள்.
800 சுகாதாரக் கிட்கள்
நகரின் தூய்மையை பாதுகாக்கும் சுகாதாரத்தொழிலாளர்கள் தினமும்
மழை வெயில் பாராமல் உழைத்து வருவது
சமூக நலனுக்கான மறக்க முடியாத
சேவையாகும்.
அவர்களின் உழைப்பை
கவுரவிக்கும் வகையில்
டைட்டான் நிறுவன ஊழியர்கள்
தன்னார்வலர்களாக மொத்தம்
800 சுகாதாரக்கிட்களை தொகுத்து
தயாரிக்கப்பட்டு,
“வே பார் லைப்” எனும் என்ஜிஓ உடன் இணைந்து
தூய்மை பணியாளர்களுக்கு
வழங்கப்பட்டது.
இந்த விழாவில்
ஒசூர் டைட்டான் நிறுவன நிர்வாகிகள் மற்றும்
ஒசூர் மாநகர தூய்மைப்பணியாளர்கள்
கலந்து கொண்டனர்.
-------------------------------.