பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து,
மனித உயிர்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற உதவிய
நோயெதிர்ப்பு முறையின் தந்தை என சிறப்பு பெற்ற
இங்கிலாந்து நாட்டு மருத்துவரும் அறிவியலாளருமான
எட்வர்ட் ஜென்னர்
மே - 14 - 1796 –
பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர்
ஏற்றிய தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மே. 14. –
பெரியம்மை (smallpox), மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும்.
இது
வரியோலா மேசர்
(Variola major)
மற்றும்
வரியோலா மைனர்
(Variola minor)
ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது.
இவற்றுள் வரியோலா மேசர் அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும். இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடுகின்றனர்.
வரியோலா மைனர் கிருமி தாக்கியவர்களுள் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே இறக்கின்றனர். உயிர் பிழைத்தவர்களில் பலரும், ஒன்று அல்லது இரண்டு கண்கள் குருடாவதுடன், நீங்காத தழும்புகளையும் பெறுகின்றனர்.
20ஆம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300-500 மில்லியன் மக்கள் இறந்தனர்.
1967ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 15 மில்லியின் மக்கள் அந்நோய்யால் பாதிக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர்.
எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை.
எட்வர்ட் ஜென்னர்
(Edward Jenner -
மே 17, 1749 - ஜனவரி 26, 1823), இங்கிலாந்து நாட்டு மருத்துவரும் அறிவியலாளரும் ஆவார்.
இளவயது முதலே இயற்கை குறித்தும் தன் சுற்றுச்சூழல் குறித்தும் அறிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார்.
நோயெதிர்ப்பு முறையின் தந்தை
பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததற்காக ஜென்னர் அறியப்படுகிறார்.
இவர் நோயெதிர்ப்பு முறையின் தந்தை என சிறப்பு பெற்றார். இவருடைய கண்டுபிடிப்பு பிற கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் மனித உயிர்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற உதவியது.
பெரியம்மை தொற்றும் தன்மை கொண்டிருந்தமையால், இது மிகவும் கொடிய நோயாக கருதப்பட்டது. பெரியம்மைக்கு தடுப்பு ஊசிகள் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே இருந்த போதிலும், ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் இந்த நோய் பரவிக்கொண்டு தான் இருந்தது.
1959ம் ஆண்டில் தான்,
உலக சுகாதார மையம்,
பெரியம்மையை முற்றிலுமாக நீக்க முடிவெடுத்தது.
நிதி பற்றாகுறையினாலும்,
போதுமான
தன்னார்வத் தொண்டர்கள் இல்லாததாலும்,
இதனை வெற்றிகரமாக செயலாக்க இயலவில்லை.
1967ம் ஆண்டில்,
மீண்டும் இந்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது.
பெரியம்மையின் முதல் தோற்றம் இன்னும் தெரியவில்லை.
ஆனால் பல நூற்றாண்டுகளாக,
இந்தக் கொடிய நோய்,
உலகின் பல்வேறு இடங்களில் தாக்கியுள்ளது.
இதற்கான காலவரிசை கீழே உள்ளது
3ம் நூற்றாண்டு -
எகிப்து நாட்டில் வாழ்ந்த பார்வோன் ராம்சேஸின் மம்மியில், பெரியம்மையின் தடயங்கள் தென்பட்டன. 3ம் நூற்றாண்டிலே, பெரியம்மை இவ்வுலகில் இருந்தது என்பதற்கு இதுவே சான்றாகும்.
4ம் நூற்றாண்டு -
சீனாவில், இந்த நோயின் அறிகுறிகளைப் பற்றி எழுத்து வடிவில் 4ம் நூற்றாண்டில் பதிவு செய்துள்ளனர். இந்த நோயிலிருந்து குணமடைய தேவன் 'யோ ஹோ லாங்'கிடம் மக்கள் வேண்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
6ம் நூற்றாண்டு -
சீனாவுக்கும், கொரியாவுக்கும்
இடையே வர்த்தகம் அதிகரித்த காலம், 6ம் நூற்றாண்டு.
இதன் மூலமாக கொரியாவுக்கும், சப்பானுக்கும் பெரியம்மை பரவத் தொடங்கியது.
'சிவப்பு வண்ணம்/ஒளி
பெரியம்மையை நீக்கும்'
என்னும் கட்டுக்கதை உலகும் முழுவதும் நம்பப்பட்டது.
சப்பான் கலாச்சாரத்திலும் அப்படித்தான், பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் சிவப்பு உடைகளை அணிந்தனர்.
7ம் நூற்றாண்டு -
7ம் நூற்றாண்டில், இந்திய துணைக் கண்டத்திற்கு பரவியது.
பின்னர், அரேபியர்கள் மூலம் வடக்கு ஆபிரிக்காவுக்குப் பரவத் தொடங்கியது.
10ம் நூற்றாண்டு -
10ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரேக்கம், துருக்கி, ரோமெனியா போன்ற நாடுகள், பெரியம்மையால் பாதிக்கப்பட்டன. ஆசியாக் கண்டத்தில் வர்த்தகம் மூலமாகப் பெரியம்மை பரவியதாகக் கருதப்படுகிறது.
11ம் நூற்றாண்டு -
ஐரோப்பிய கண்டத்தில்
பெரியம்மை பரவியது.
சிலுவைப் போரின் காரணமாக, ஐரோப்பிய கிருத்துவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குக் குடிபுகுந்த போது பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
13ம் நூற்றாண்டு -
மக்கள் தொகை பெருக்கத்தினாலும், உலகம் சுற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், பெரியம்மை வடக்கு ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்துக்கு பரவியது.
15ம் நூற்றாண்டு -
15ம் நூற்றாண்டில், பெரியம்மை ஐரோப்பிய நாடுகளில் பரவலாக தென்பட்டது. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த மக்கள் மேற்கொண்ட கடல் வழி பயணத்தால், கிழக்கு ஆபிரிக்காவுக்குப் பெரியம்மை பரவியது.
16ம் நூற்றாண்டு -
ஐரோப்பியர்களின் குடியேற்றத்தினாலும், ஆபிரிக்காவின் அடிமை வர்த்தகத்தினாலும், அமெரிக்கக் கண்டங்களுக்கு பெரியம்மை பரவியது.
17ம் நூற்றாண்டு -
'வரியோலேசன்' தடுப்பு முறை, ஒட்டோமன் பேரரசாங்கத்திலும் பின்பற்றத் தொடங்கினர்.
18ம் நூற்றாண்டு -
'வரியோலேசன்' தடுப்பு முறை இங்கிலாந்து நாட்டில்
'லேடி மேரி வார்ட்லி மான்டெகு'
அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
20ம் நூற்றாண்டு -
20ம் நூற்றாண்டில், பெரியம்மை
ஆபிரிக்கா,
ஆசியா,
தென் அமெரிக்கா,
கண்டங்களில்
இன்னும் தென்பட்டது.
ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் தடுப்பூசி மூலம் பெரும்பாலும் கட்டுப்படுத்தப் பட்டிருந்தது.
உலகளாவிய வேருடன் அழித்தல் முகாம் மூலம், 1980ம் ஆண்டில் பெரியம்மை முற்றிலுமாக நீக்கப்பட்டது.
------------------------------------.