கெலமங்கலம் நகரத்தில்
புகழ்பெற்ற சென்னகேசவ சுவாமி
திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி
சொர்க்கவாசல் திறப்பு
மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்
ஓசூர். ஜனவரி. 11. –
வைகுண்ட ஏகாதசி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலத்தில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற ஸ்ரீசென்னகேசவ சுவாமி திருக்கோயிலில்
வைகுண்ட ஏகாதசி
சொர்க்கவாசல் திறப்பு பூஜை
சிறப்பாக நடைபெற்றது.
சொர்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு சென்னகேசவ சுவாமிக்கு
சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா,
என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர்.
கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டு சிறப்பு அன்னதானம்
வழங்கப்பட்டது.
மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீசென்னகேசவ சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த சொர்கவாசல் திறப்பு பூஜையில் கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி, ஓசூர்,
சூளகிரி மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
குடும்பத்தோடு வருகை தந்து ஸ்ரீசென்னகேசவ சுவாமியை வழிபட்டு தரிசித்தனர்.