கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சி
மத்திகிரியில் வரிகள் செலுத்த
பொதுமக்களுக்கான விழிப்புணர்வு சிறப்பு முகாம்
ஓசூர் மேயர்
திரு. S.A. சத்யா
பங்கேற்பு
ஒசூர். பிப். 7. –
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திகிரியில்
2025-26 -ம் ஆண்டு முடிய செலுத்த வேண்டிய
சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி,
உள்ளிட்ட பல்வேறு வரிகள் செலுத்த வலியுறுத்தி
பொதுமக்களுக்கான விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஒசூர் மத்திகிரி பேருந்து நிலையத்தில் நடந்த இந்த முகாமில்
ஓசூர் மாநகர மேயர்
திரு. S.A. சத்யா
பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பொதுமக்கள் 2025- 26-ம் ஆண்டு முடிய செலுத்த வேண்டிய சொத்துவரி,
காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் மாநகராட்சி கடை வாடகை ஆகியவற்றை உடனடியாக செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் மாநகராட்சி
வரிக்குழு தலைவர் சென்னீரப்பா
அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.