6 மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு
வணிக சந்திப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் மாநகராட்சி
தமிழ்நாடு மாநில ஊரக /
நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக,
கிருஷ்ணகிரி,
தருமபுரி,
சேலம்,
நாமக்கல்,
திருப்பத்தூர்,
ராணிப்பேட்டை
ஆகிய 6 மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு
உற்பத்தி பொருட்களுக்கான வணிக சந்திப்பு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
ஒசூர்.மாநகர மேயர்
திரு. S.A. சத்யா
அவர்கள்
ஆகியோர் பங்கேற்பு
ஒசூர். பிப். 7. –
தமிழ்நாடு மாநில ஊரக /
நகர்புற வாழ்வாதார இயக்கம்
6 மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு
வணிக சந்திப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் மூக்கண்டப்பள்ளி
ஹோட்டல் ஹில்ஸ் கூட்டரங்கில்,
தமிழ்நாடு மாநில ஊரக /
நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக,
கிருஷ்ணகிரி,
தருமபுரி,
சேலம்,
நாமக்கல்,
திருப்பத்தூர்,
ராணிப்பேட்டை
ஆகிய 6 மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு
உற்பத்தி பொருட்களுக்கான
வணிக சந்திப்பு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் (07.02.2026) குத்துவிளக்கேற்றி
துவக்கி வைத்து மகளிர் சுய
உதவிக்குழுவினரின்
உற்பத்தி பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார
இயக்க திட்ட இயக்குநர்
திரு.பி.பெரியசாமி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புரிந்துணர்வு ஒப்பந்த ஆணைகள்
அதனை தொடர்ந்து
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த
227 மகளிர் சுய உதவிக்குழுவினர்
75 சிறு குறு நிறுவனங்களுக்கிடையே
சிறுதானிய உணவு பொருட்கள்,
கலைப்பொருட்கள்,
துணி வகைகள்,
நாட்டுக்கோழி
உள்ளிட்ட உற்பத்தி பொருட்களை
ரூ.7 கோடி மதிப்பில் விற்பனைக்கான
புரிந்துணர்வு ஒப்பந்த ஆணைகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்ததாவது:
வணிக சந்திப்பு
(Business meet)
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தமிழ்நாடு மாநில ஊரக /
நகர்புற வாழ்வாதார இயக்கம், சார்பாக
2025-2026 ம் ஆண்டிற்கு
மகளிர் சுய உதவிக்குழு
தொழில் முனைவோர்
உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட
மண்டல அளவில்
கிருஷ்ணகிரி, தருமபுரி,
சேலம், நாமக்கல்,
திருப்பத்தூர், ராணிப்பேட்டை
ஆகிய மாவட்டங்களை சேர்ந்த
227 மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களுக்கான
வணிக சந்திப்பு (Business meet)
இன்று நடைபெற்றது.
இன்று நாம் அனைவரும்
ஒரு பொருள் முன்முயற்சி
மேற்கொண்டு மண்டல அளவிலான
வணிக சந்திப்பினை நடத்திக்கொண்டு இருக்கிறோம்.
மகளிர் சுய உதவிக் குழு
உறுப்பினர்களுக்கான
ஒரு சிறந்த வாய்ப்பை உருவாக்கி
அவர்களின் உற்பத்தி பொருட்களை
விற்பனை செய்வதற்கான நிகழ்ச்சியாக இம்மண்டல அளவிலான வணிக சந்திப்பு.
நமது மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு சிறந்த தயாரிப்புகளை உருவாக்குகின்றனர்.
அவர்கள்
பல்வேறு கைத்தொழில்கள்,
சிறு தானிய சிறப்பு உணவுகள்,
கலைப்பொருட்கள்,
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்
மற்றும்
பல வகையான தயாரிப்புகளை
பராம்பரிய முறையில் தயாரித்து
விற்பனை செய்து வருகின்றனர்.
இப்போது அதை வர்த்தக முறையில்
விற்பனை செய்யும் வகையில் தயாரித்து வருகின்றனர்.
இவ்வணிக சந்திப்பில்,
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள்
உற்பத்தி செய்யும் பொருட்களான
சிறுதானிய வகைகள் மற்றும்
சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்,
உணவுப் பொருட்கள்,
காய்கறிகள்,
பழங்கள்,
கீரை வகைகள்,
நர்சரி செடி வகைகள்,
தென்னந்துடைப்பம்,
வீட்டு உபயோகப் பொருட்கள்,
பாக்கு மட்டை தட்டுகள்,
பாரம்பரிய அரிசி வகைகள்,
பருப்பு வகைகள்,
கொட்டைகள்,
பினாயில்,
சோப் ஆயில்,
டிட்டர்ஜென்ட் சோப்புகள்,
ஆர்கானிக் குளியல் சோப்புகள்,
அழகு சாதனப் பொருட்கள்,
வேளாண் விளைப்பொருட்கள்,
கைவினைப் பொருட்கள்,
திண்பண்டங்கள்,
பூ வகைகள்,
புளி,
மசாலா பொடி வகைகள்,
ஊறுகாய் வகைகள்,
மரச்செக்கு எண்ணெய் வகைகள்,
பரிசு பெட்டகங்கள்,
பூஜை பொருட்கள்,
சத்துமாவு வகைகள்,
கால் மிதியடிகள்,
இயற்கை உரங்கள்,
பிரிண்டிங் பைகள்,
அலுவலக உபயோகப் பைகள்
மற்றும்
ஆயத்த ஆடைகள்
போன்ற பொருட்கள் விற்பனை வாய்ப்பிற்காக காட்சிப்படுத்தப்பட்டது.
எனவே, இவ்வணிக சந்திப்பிற்கு
வணிகர் சங்கங்கள்,
மொத்த கொள்முதல் செய்பவர்கள்,
சுத்திப்பணி மேற்கொள்பவர்கள்,
ஏற்றுமதியாளர்கள்,
மொத்த விற்பனையாளர்கள்,
சில்லறை விற்பனையாளர்கள்,
ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள்,
வறுமை ஒழிப்பு சங்கங்கள்,
ஒத்த தொழில் குழுக்கள்,
உற்பத்தியாளர் குழுக்கள்,
அமைப்பு சாரா நிறுவனங்கள்,
ஆவின்,
காதி கிராம தொழில் வாரியம்,
வேளாண் வணிகத்துறை,
தோட்டக்கலைத்துறை,
பொது சுகாதாரத்துறை,
பள்ளி கல்வித்துறை,
தொழில் துறை முன்னனி உழவர்
உற்பத்தியாளர் கூட்டமைப்புகள்,
சிறு, குறு, பெரு தொழில் நிறுவனங்கள்,
ஹோட்டல் நிறுவனங்கள்,
ஆகிய தொழில் நிறுவனங்கள்
மண்டல அளவிலான வணிக சந்திப்பில் கலந்துக்கொண்டு மகளிர் சுய உதவிக்குழு
தொழில் முனைவோர்களின்
உற்பத்தி பொருட்களை
கொள்முதல் செய்து கொள்ளலாம்.
ஒருபொருளை தரமாக உற்பத்தி செய்து சந்தைபடுத்துதல் முக்கியமானதாகும்.
மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருளைகளை எளிய முறையில் சந்தைபடுத்துவதற்காக தான்
இதுபோன்ற
விற்போர், வாங்குவோர்
சந்திப்பு நிகழ்ச்சி
நடத்தப்படுகிறது.
மேலும் மண்டல அளவில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் உரையாற்றினார்.
மேலும்
ஆஜிவிகா கிராமின்
எக்ஸ்பிரஸ் யோஜனா
திட்டத்தின் கீழ்
திருநங்கை பானு,
திருமதி.மாலா
ஆகியோருக்கு வட்டியில்லா கடனுதவி மூலம்
ரூ. 8 லட்சம் மதிப்பிலான
ஆட்டோகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட தொழில் மைய
பொது மேலாளர்
திரு.வெங்கடேசன்,
தமிழ்நாடு ஊரக புத்தாக்க
திட்ட செயல் அலுவலர்
திரு.மனோகரன்,
உதவி திட்ட அலுவலர்
திரு.மணிவண்ணன்,
வட்டாட்சியர்
திரு.குணசிவா
மற்றும் உதவி திட்ட அலுவலர்கள்,
சிறு,குறு நிறுவன பிரதிநிதிகள்,
துறை சார்ந்த அலுவலர்கள்
மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.
----------------------------------------.