கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
750 கிராம் எடையுடன் பிறந்த
பச்சிளம் குழந்தையை காப்பாற்றி
மருத்துவர்கள் சாதனை
ஒசூர். செப். 20 . -
ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கருவுற்று 25 வாரத்தில் பிறந்த 750 கிராம் எடை கொண்ட பச்சிளம் குழந்தையை காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில்
அதியமான் கல்லூரி அருகே செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையில் பணியில் உள்ள
சிறந்த பயிற்சி பெற்ற மருத்துவர்கள்,
இங்குள்ள நவீன மருத்துவக் கருவிகளின் உதவியுடன்,
நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கு உதாரணமாக சமீபத்தில்
750 கிராம் எடையில் பிறந்த பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து
மருத்துவக்கல்லூரி முதல்வர்
மருத்துவர் ராஜா முத்தையா.
கூறியதாவது ...
இந்த மருத்துவமனையில் கருவுற்று 25 வாரம் மட்டுமே ஆன தாய் ஒருவர்
பிரசவ வலியின் காரணமாக
கடந்த ஜூலை 9 - ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு 750 கிராம் எடையுடன் குழந்தை பிறந்தது.
பிரசவ காலத்திற்கு முன்கூட்டியே குழந்தை பிறந்ததால்
சுவாச பிரச்சனை, நோய் தொற்று மற்றும் மூளையில் இரத்தக்கசிவு அபாயம் ஏற்படாமல் பாதுகாக்க குழந்தையை,
பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டு
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
24 மணிநேர தீவிர கண்காணிப்பு
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின்
24 மணிநேர தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சையின் காரணமாக பச்சிளம் குழந்தைக்கு எவ்வித சுவாச பிரச்சனை, பார்வை குறைபாடு மற்றும் நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர்.
மருத்துவக்குழுவின் தீவிர முயற்சியால்
செப்டம்பர் 15 - ம் தேதி
குழந்தை சுமார் 1.500 கிலோகிராம் எடையுடன் தாய்ப்பாலை நன்றாக குடிக்கும் நிலையை அடைந்துள்ளது.
இந்த தாய்க்கு ஏற்கனவே இரண்டுமுறை கருவுற்று கருச்சிதைவு நடைபெற்ற நிலையில், தற்போது பிரசவக்காலத்திற்கு முன்பே குழந்தை பிறந்த நிலையில் மகப்பேறு மருத்துவர்கள் பச்சிளங்குழந்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தீவிர முயற்சி மற்றும் மருத்துவமனையின் மேம்பட்ட பச்சிளம்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு வசதி ஆகியவற்றின் காரணமாக பச்சிளம் குழந்தை விரைவில் உடல் நலம் பெற்று, தாய் மற்றும் சேய் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.
இந்த சவாலான சூழ்நிலையை திறம்பட கையாண்ட
மகப்பேறு மருத்துவர்கள்,
பச்சிளம் குழந்தை மருத்துவர்கள்
செவிலியர்கள்
ஆகியோரை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது மருத்துவக்கல்லூரி மருத்துவ அலுவலர்
டாக்டர். கிரீஷ் ஓங்கல்,
இருப்பிட மருத்துவ அலுவலர்
டாக்டர் பார்வதி,
மற்றும் மகப்பேறு மருத்துவர்கள்
உடனிருந்தனர்.
----------------------------------------.