அரசுத் துறை மற்றும் தனியார் துறைக்கு அடுத்து மூன்றாம் துறையாக விளங்கி வரும் அரசு சார்பற்ற அமைப்புகள்(NGO)
பிப்ரவரி – 27 -
உலக அரசு சாரா அமைப்பு தினம் (World Non-Governmental Organization Day_NGO)
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். பிப். 27. –
அரசு சார்பற்ற அமைப்பு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனம் (non-governmental organization NGO)
என்பது தனியாரால் அல்லது அரச பங்களிப்பு அல்லது சார்பற்று சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புக்களாகும்.
அரசினால் முழுமையாக அல்லது பகுதியாக நிதியளிக்கப்படும் அமைப்புக்கள் தங்கள் அரசு சார்பின்மையைக் காத்துக் கொள்வதற்காக அரசுக்குத் தமது அமைப்பில் எவ்வித உறுப்புரிமையும் அளிப்பதில்லை.
2025 ஆம் ஆண்டு உலக அரசு சாரா நிறுவன தினத்திற்காக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட கருப்பொருள்
"நிலையான எதிர்காலத்திற்கான அடிமட்ட இயக்கங்களை மேம்படுத்துதல்".
அனைவருக்கும்
பயனளிக்கும் உலகம்
இன்றும் எதிர்காலத்திலும் அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு உலகத்தை உருவாக்குவதற்கு உள்ளூர் சமூகங்கள் நடவடிக்கை எடுப்பதில் ஆதரவளிப்பது அவசியம் என்பதை இந்த கருப்பொருள் அறிவுறுத்துகிறது.
பல்வேறு நாடுகளில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்கி வருகின்றன.
உலக அளவில் 40,00,000 அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய அளவில் இயங்குபவை இவற்றைவிட மிகவும் கூடுதலாகும். ரஷ்யாவில் சுமார் 4,00,000 அரசு சார்பற்ற அமைப்புக்களும்,
இந்தியாவில் 32,00,000 (32 இலட்சம்) அமைப்புக்களும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இந்தியாவின் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைளைவிட கூடுதலாக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இயங்குவதாகவும், நகர்புறங்களில் 1,000 மக்களுக்கு 4 அரசு சார்பற்ற அமைப்புகளும்; கிராமப்புறங்களில் 1,000 நபர்களுக்கு 2.3 தொண்டு நிறுவனகள் இயங்குகிறது.
அரசுத் துறை மற்றும் தனியார் துறைக்கு அடுத்து அரசு சார்பற்ற அமைப்புகள் மூன்றாம் துறையாக விளங்குகிறது.
அனைத்துலக அரசு சார்பற்ற அமைப்புக்களின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து தொடங்குகின்றது எனலாம்.
இவை
அடிமை ஒழிப்பு இயக்கம்,
பெண்கள் துன்பங்களுக்கு எதிரான இயக்கம்
போன்றவை தொடர்பில் முக்கியமானவையாக இருந்தன.
ஐக்கிய நாடுகள் அவை
உலக ஆயுதக் களைவு மகாநாட்டுக் காலத்தில் இவற்றின் முக்கியத்துவம் உச்சக் கட்டத்தை எட்டியது எனலாம். எனினும் அரசு சார்பற்ற அமைப்பு என்னும் பெயர் 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் தோற்றத்துக்குப் பின்னரே பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்தது.
ஐக்கிய நாடுகள் அவைப் பட்டயத்தின் அத்தியாயம் 10 பிரிவு 71, அரசோ அல்லது உறுப்பு நாடுகளோ அல்லாத அமைப்புக்கள் ஆலோசனை வழங்கும் அமைப்புக்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசு மற்றும் மக்களின் நலன் மற்றும் வளர்ச்சி திட்டகளுக்கு எதிராக செயல்படும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் பதிவை நீக்க 2010 வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் இந்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் கீழ் இது வரை 4,470 அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பதிவை இந்திய அரசு நீக்கி தடைசெய்துள்ளது.
---------------------------------------------------.