உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
மத்திகிரியில்
43 – 44- 45- ஆகிய வார்டுகளில்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மேயர் S.A. சத்யா ஆய்வு
ஓசூர். அக். 7. -
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
மத்திகிரியில் அக். 7, 8 இருநாட்கள் நடந்த
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை
மேயர் S.A. சத்யா
அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஓசூர் மாநகராட்சியில் உள்ள 43, 44, 45 ஆகிய
3 வார்டுகளுக்கான
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மத்திகிரியில் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில்
அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது.
அக்.8-ம் தேதி வரை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இதில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து மக்களிடம் மனுக்களை பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இந்த முகாமை
மேயர் எஸ்.ஏ. சத்யா
அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த முகாமில்
1. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,
2. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை,
3. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,
4. எரிசக்தித்துறை
5. கூட்டுறவு, உணவு மற்றும் பாதுகாப்புத்துறை
6. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
7. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
8. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை
9. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை
10. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை
11. குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை
12. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
13. தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
ஆகிய 13 துறைகளின் சார்பில்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை,
குடிநீர் இணைப்பு,
சொத்துவரி பெயர் மாற்றம்,
கட்டிட அனுமதி,
வாரிசு சான்றிதழ்,
சாதிச்சான்றிதழ்,
முதியோர் உதவித்தொகை,
விதவை உதவித்தொகை,
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுவதற்கான பிரிவு,
மின்கட்டண பெயர் மாற்றம்,
மகளிர் சுய உதவிக்குழு கடன்,
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை,
இணைய வழி வீட்டுமனை பட்டா,
கலைஞர் கைவினைத்திட்டம்
உட்பட 43 சேவைகள் வழங்க அரங்குகள் அமைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது.
முகாமில் 43, 44, 45 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர்.
இந்த முகாமில்
துணை மேயர் ஆனந்தய்யா,
மாநகர வரிக்குழு தலைவர் சென்னீரப்பா, கவுன்சிலர் மஞ்சுளா,
திமுக நிர்வாகிகள்
மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.