சமத்துவ பொங்கல்
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட
ஆரம்ப சுகாதார நிலையத்தில்
சமத்துவ பொங்கல் விழா.
வட்டார மருத்துவ அலுவலர்
திரு. ராஜேஷ்குமார்,
பங்கேற்பு
தேன்கனிக்கோட்டை. ஜன. 13. -
கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட
ஆரம்ப சுகாதார நிலையம்
கெலமங்கலம் பேரூராட்சியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட
ஆரம்ப சுகாதார நிலையத்தில்
அழகிய வண்ணமயமான கோலமிட்டு
உரியடி விளையாட்டுடன்
பாரம்பரிய முறையில்
சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக
கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம்
அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவுக்கு
வட்டார மருத்துவ அலுவலர்
திரு. ராஜேஷ்குமார்,
தலைமை வகித்தார்.
அலுவலக கண்காணிப்பாளர்
திரு. ராஜா,
மருத்துவ அலுவலர்கள்
திரு. சஞ்சய் காந்த்,
திரு. அஜய்,
திருமதி. பஹிமா,
திரு. கார்த்திக்
ஆகியோர் முன்னிலையிலும் இந்த சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது.
அழகிய கோலங்கள்
விழாவை முன்னிட்டு
மருத்துவமனையை மாவிலை
தோரணங்கள் கட்டியும்
மற்றும்
வண்ணமயமான பிரமாண்டமான
அழகிய கோலங்கள் இட்டு
அலங்கரித்திருந்தனர்.
பின்பு புது அடுப்பு வைத்து சுற்றிலும் கரும்புகள் கட்டி மஞ்சள் கொம்பு கட்டப்பட்ட புது பானையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பாரம்பரிய விளையாட்டு
பரிசளிப்பு
விழாவில் கிராம சுகாதார செவிலியர்கள்,
மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர் இடையே
உரியடி உள்ளிட்ட பலவித போட்டிகள்
நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
பாரம்பரிய உடை
விழாவில் மருத்துவர்கள்
கிராம சுகாதார செவிலியர்கள்
பகுதி சுகாதார செவிலியர்கள்
மருத்துவமனை பணியாளர்கள்
ஆஷா பணியாளர்கள்
உட்பட பல்வேறு துறை பணியாளர்கள்
அனைவரும் பாரம்பரிய முறையில்
மகளிர் பட்டு சேலையும்,
ஆண்கள் வேட்டி சட்டையும்
என புத்தாடை அணிந்து
கலந்து கொண்டனர்.
----------------------------------------------.
உரியடி போட்டி
உரி அடியில் முதல் போட்டியாளராக
கலந்து கொண்டு
உரி அடித்து வெற்றி பெற்ற
வட்டார கண்காணிப்பாளர்
திரு. ராஜா.
அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
அனைவருக்கும் சுவையான பொங்கல் வழங்கப்பட்டது.
சமத்துவ பொங்கல் விழா ஏற்பாடுகளை
சுகாதார ஆய்வாளர்கள்
திரு. சிவகுருநாதன்,
திரு. அசோக்
ஆகியோர்
சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த சமத்துவ பொங்கல் விழாவில்
சமூக ஆர்வலர்
டாக்டர். சுப்பிரமணியம்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
---------------------------------.