கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
குருகுலம் குளோபல்
ரெஸிடென்ஷியல் பள்ளியில்
சம்ஸ்க்ருதி 2025 ஆண்டு விழா
தேன்கனிக்கோட்டை . ஏப்ரல். 6. –
“சம்ஸ்க்ருதி 2025”
தேன்கனிக்கோட்டையில் இயங்கி வரும் குருகுலம் குளோபல் ரெஸிடென்ஷியல் பள்ளியில் “சம்ஸ்க்ருதி 2025” ஆண்டு விழா,
கடந்த காலம்,
நிகழ்காலம்,
எதிர்காலம்,
பாரதத்துக்கு ஒரு அஞ்சலி”
என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தில்
குருகுலம்
குளோபல்
ரெஸிடென்ஷியல்
பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப்பள்ளியில் எல்கேஜி முதல் 10-வது வகுப்பு வரை 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
தரமான கல்வி (CBSE)
இங்கு பயிலும் மாணவ,
மாணவிகளுக்கு சிபிஎஸ்இ பாட திட்டத்தில் நல்லொழுக்கத்துடன்,
தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
இந்த குருகுலம் குளோபல் ரெஸிடென்ஷியல் பள்ளியில்
ஏப்ரல் 5-ம் தேதி அன்று மாலை 5 மணிக்கு “சம்ஸ்க்ருதி 2025” ஆண்டு விழா,
கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்கால பாரதத்துக்கு ஒரு அஞ்சலி” என்ற தலைப்பில் நடைபெற்றது.
குத்து விளக்கு
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
திரு. எம்.என். ரெட்டி,
ஜெனரல் மோட்டார்ஸ்,
கேட்டர்பில்லர் போன்ற
உலகத் தலைசிறந்த
நிறுவனங்களில் முன்னணி மேலாண்மை பொறுப்புகள்
வகித்தவர்.
திரு. வீரபத்ரய்யா ஜி.,
மூத்த வழக்கறிஞர்
மற்றும் வரி ஆலோசகர்.
திருமதி. ராஜலக்ஷ்மி ரெட்டி,
உலகலாவிய திறனுடைய தொழிலதிபர் மற்றும் சமூக தொண்டாளர்.
மற்றும் குருகுலம் தலைமை நிர்வாகிகள் பங்கேற்று குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
வரவேற்புரை
குருகுலம் துணைத்தலைவர்
பேராசிரியர் நரசி ரெட்டி
அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
ஆண்டறிக்கை வாசிப்பு
குருகுலம் முதல்வர்
திருமதி. புனிதா
பள்ளியின் ஆண்டறிக்கை
வாசித்தார்.
இந்த விழாவில் முக்கிய விருந்தினராக தொழில் துறை வணிக உத்தியாளர் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர்
திரு. சுரேஷ் லட்சுமையா
கலந்து கொண்டு சிறப்பாக உரையாற்றி மாணவர்களை ஊக்குவித்தார்.
இந்த விழாவில்
மாண்புமிகு விருந்தினர்கள்
திரு. ஆனந்த் ராஜ்,
துணை கண்காணிப்பாளர்
(DSP)
திரு. கணேஷ்குமார்,
உதவி ஆய்வாளர் (SI),
தேன்கனிகோட்டை
குருகுலம் கல்வி நிறுவனத்தின் தலைமைத்துவ குழுவினர்:
குருகுலம் நிறுவனர்
மற்றும் தலைவர்
டாக்டர் கணபதி ரெட்டி,
குருகுலம்
துணைத்தலைவர்
பேராசிரியர் நரசி ரெட்டி,
குருகுலம் இயக்குநர்
டாக்டர். ராம பிரசாத் ரெட்டி,
குருகுலம் இயக்குநர்
மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி
திரு. வம்சி ரெட்டி,
குருகுலம் இயக்குநர் –
நிர்வாகம்
திருமதி பி.என். புஷ்பா.
குருகுலம் முதல்வர்
திருமதி. என். புனிதா,
மற்றும் ஆசிரியர்கள்
ஆகியோர் கலந்து கொண்டு
விழாவை சிறப்பித்தனர்.
கலை நிகழ்ச்சிகள்
குருகுலம் பள்ளி
ஆண்டு விழாவில்
சமூக,
கலாச்சார,
கல்வி,
முக்கியத்துவங்களோடு கலை நிகழ்ச்சிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
பாராட்டு
இந்த கலை நிகழ்ச்சிகளில் எல்கேஜி முதல் 10-வது வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் சிறப்பாக பங்கேற்று தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றனர்.
இந்த சம்ஸ்க்ருதி 2025 விழா மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும்
மேடையாகவும்,
பாரத நாட்டின்
பண்பாட்டையும்,
கலாச்சாரத்தையும்,
போற்றும் விழாவாகவும்
சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் 2000 பெற்றோர் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
விழா ஏற்பாடுகளை குருகுலம் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
-------------------------------.