குடியரசு தலைவர் மாளிகையில்
மூதறிஞர் ராஜாஜி
திருவுருவச் சிலை வைத்த
மத்திய அரசுக்கு நன்றி ----
ஐஎன்டியுசி தேசிய செயலாளர்
திரு. K.A. மனோகரன் Ex.MLA.
ஒசூர், பிப்.24. -
குடியரசுத் தலைவர் மாளிகையில்
மூதறிஞர் ராஜாஜி
திருஉருவச்சிலை
இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜியின் திருவுருவ சிலையை வைத்த
மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக
ஐஎன்டியுசி தேசிய செயலாளர்
திரு. K.A. மனோகரன்.
Ex.MLA.
அவர்கள் கூறினார்.
ஒசூர் ஐஎன்டியுசி அலுவலகத்தில்
அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
இந்திய குடியரசு தலைவர் மாளிகையில்
நமது மாவட்டத்தைச் சேர்ந்த
முன்னாள் கவர்னர் ஜெனரல்
மூதறிஞர் ராஜாஜி
அவர்களின்
திருவருவச் சிலையை வைத்த
மத்திய அரசுக்கு நன்றி.
காவல்துறை ஆணையர்
ஒசூர் நகராட்சியை மாநகராட்சியாக
தரம் உயர்த்தி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஆனால் இங்கு காவல்துறை ஆணையரை நியமிக்கவில்லை.
உடனடியாக காவல்துறை ஆணையரை
நியமித்து காவல்துறை ஆணையர்
அலுவலகம் திறக்க வேண்டும்.
போதிய காவலர்கள் நியமிக்க வேண்டும்.
பள்ளிச் சிறுவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதை கண்காணிக்க
அதிக காவலர்களை நியமிக்க வேண்டும்.
மேலும் ஒசூர் மாநகராட்சியில்
கொலை, கொள்ளை அதிக அளவில் நடைபெறுகிறது.
எனவே ஒசூரை நோக்கி வரும் தொழில்சாலைகள் திரும்பிச் செல்ல வாய்ப்பு உள்ளது.
ராயக்கோட்டை சாலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
புதியதாக கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்
தேசிய நெடுஞ்சாலையில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.
ஏரித் தெருவில் உள்ள பழைய மருத்துவமனையை ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்படுத்த வேண்டும்.
அவரச சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்.
தேர்த்திருவிழா
மார்ச்- 3 ஆம் தேதி நடைபெறும் தேர்த்திருவிழா
சந்திர கிரகணம் காரணமாக
காலை 6 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு
நிறைவு பெறும். இவ்வாறு கூறினார்.
----------------------------------------------.