கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சி
மத்திகிரியில்...
செயின்ட் சேவியர்
அகாடமி பள்ளி (CBSE)
ஆண்டு விழா
(28-02-26)
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளுடன்
கோலாகலமாக கொண்டாட்டம்.
தருமபுரி மறைமாவட்ட
மேதகு ஆயர்
முனைவர் லாரன்ஸ் பயஸ்
அவர்கள்.
F.S.M. சபை மாநில தலைவி
மதர் ஆஞ்சலா,
அவர்கள்.
மாவட்ட கல்வி அலுவலர்
(தனியார் பள்ளி)
கோபாலப்பா,
மத்திகிரி காவல்நிலைய ஆய்வாளர்
திரு. முத்தமிழ் செல்வராசன்
அவர்கள்.
ஆகியோர் பங்கேற்பு.
ஓசூர். பிப்ரவரி. 28. –
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளி
அனைத்து துறைகளிலும்
சிறந்த பள்ளியாக திகழ்கிறது.
“ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம்”…
-- மேதகு ஆயர் புகழாரம்.
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
மத்திகிரியில் இயங்கி வரும
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளியின்
ஆண்டு விழா
பிப்ரவரி 28-ம் தேதியன்று
மாணவ, மாணவிகளின்
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளுடன்
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குறைந்த கல்வி கட்டணத்தில்
தரமான கல்வி
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
மத்திகிரி நேதாஜிநகரில்
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளி(CBSE) இயங்கி வருகிறது.
CBSE - பாடதிட்டத்தில்
குறைந்த கல்வி கட்டணத்தில்
தரமான கல்வி வழங்கும்
இந்தப்பள்ளியில்
Pre-KG வகுப்பு முதல் 10 -வது வகுப்பு வரை
300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்
கல்வி பயின்று வருகின்றனர்.
மாணவர்கள் சேர்க்கை
நடப்பு கல்வியாண்டில்( 2026-27)
Pre-KG முதல் 10-வது வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை
நடைபெற்று வருகிறது.
இங்கு மாணவர்களுக்கு
நல்லொழுக்கத்துடன், தரமான கல்வி கற்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஸ்மார்ட் போர்டுகள்
பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும் டிஜிட்டல் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளியின்
சிறப்பம்சங்கள்
அறிவியல் ஆய்வகம்,
கணினி ஆய்வகம்,
மல்டி ஆக்டிவிடி ஹால்,
கணித ஆய்வகம்,
நூலகம்,
ரோபோட்டிக்ஸ்,
மொழி ஆய்வகம்,
அபகாஸ்
உள்ளிட்ட சிறப்பு பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
செயின்ட் சேவியர்
அகாடமி பள்ளியின்
கூடுதல் சிறப்பு அம்சங்கள்
வில்வித்தை,
துப்பாக்கி சுடுதல்,
சிலம்பம்,
கராத்தே,
குங்ஃபூ,
ஸ்கேட்டிங்,
கீபோர்டு,
நடனம்
ஆகியவற்றிலும் மாணவர்களுக்கு
பயிற்சி அளிக்கப்படுகிறது.
விளையாட்டு மைதானம்
செயின்ட் சேவியர் அகாடமி
பள்ளியில் பயிலும்
மாணவ, மாணவிகள் கல்வியில்
மட்டுமின்றி விளையாட்டு
போட்டிகளிலும் சிறந்து
விளங்கும் வகையில்
கிரிக்கெட் மைதானம்,
கால்பந்து மைதானம்,
கூடைப்பந்து மைதானம்,
உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு
மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பூங்கா
மேலும் இந்தப்பள்ளியில்
Pre-KG முதல் 2-வது வகுப்பு வரை பயிலும் பள்ளி குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களுடன் அழகிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டு விழா
இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளியின் ஆண்டுவிழா பிப்ரவரி 28-ம் தேதியன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவை
தருமபுரி மறை மாவட்ட
மேதகு ஆயர்
முனைவர் லாரன்ஸ் பயஸ்
அவர்கள் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி
தொடங்கி வைத்தார்.
வரவேற்புரை
செயின்ட் அகாடமி பள்ளியின்
முதல்வர் மற்றும் தாளாளர்
அருட்பணி பெரியநாயகம்
அவர்கள்
அனைவரையும் வரவேற்று
உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்கள்
முன்னதாக இந்த விழாவில் பங்கேற்க
சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த
தருமபுரி மறை மாவட்ட
மேதகு ஆயர்
முனைவர் லாரன்ஸ் பயஸ்,
அவர்கள்
F.S.M. சபை மாநில தலைவி
மதர் ஆஞ்சலா,
அவர்கள்
மாவட்ட கல்வி அலுவலர்
(தனியார் பள்ளி)
திரு. கோபாலப்பா,
அவர்கள்
மத்திகிரி காவல் நிலைய ஆய்வாளர்
திரு. முத்தமிழ் செல்வராசன்
அவர்கள்
ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து மேளதாளங்கள் இசைக்க சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பரிசு பொருட்கள்
விழா தொடக்கத்தில்
படிப்பு மற்றும் விளையாட்டு போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு
பரிசு பொருட்கள்,
வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில்
மேதகு ஆயர்
முனைவர் லாரன்ஸ் பயஸ்
அவர்கள்
மதர் ஆஞ்சலா
அவர்கள்
மாவட்ட கல்வி அலுவலர்
திரு. கோபாலப்பா,
அவர்கள்
மற்றும் அருட்பணியாளர்கள்
ஆகியோர் பங்கேற்று
மாணவ, மாணவிகளுக்கு
பதக்கங்கள், கோப்பைகள்
உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினார்கள்.
சிறப்புரை
தருமபுரி மறைமாவட்ட
மேதகு ஆயர்
முனைவர் லாரன்ஸ் பயஸ்
அவர்கள் சிறப்புரையில் ...
தருமபுரி மறைமாவட்டத்தில்
20 பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகிறது.
அவற்றில் ஒரே சிபிஎஸ்சி பள்ளியாக
மத்திகிரி செயின்ட் சேவியர் பள்ளி திகழ்கிறது.
இங்கு பயிலும் மாணவ,மாணவிகள்
படிப்பு, விளையாட்டு, மட்டுமின்றி
பாரம்பரிய நடனம், நாட்டியம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
அதற்கு இங்கு கலை நிகழ்ச்சியில்
நடனமாடிய மாணவ, மாணவிகளே
சிறந்த உதாரணம்.
இந்த கலை நிகழ்ச்சியில் என்னை மிகவும் கவர்ந்தது…
இரண்டாவதாக நடந்த….
சங்க கால இலக்கியங்களை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்ட பாடலுக்கு
மாணவ, மாணவிகள் நடனமாடிய நிகழ்ச்சியாகும்.
ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம்… என்பது போல…
இந்த ஒரு கலை நிகழ்ச்சி
இந்தப்பள்ளி அனைத்து துறைகளிலும்
சிறந்த பள்ளி என்பதற்கு
நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட கல்வி அலுவலர்
திரு. கோபாலப்பா
பேசும்போது…
“கல்வி ஒன்று தான் எவராலும்
திருடமுடியாத சாதனம்”
பெற்றோர்… தங்களுடைய குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்துடன் நல்ல சத்தான காய்கறி, கீரைகள், பழங்கள் உள்ளிட்ட சத்துள்ள உணவுகளை சாப்பிட கொடுக்க வேண்டும்.
சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் தான் மாணவர்களின் மூளை வளர்ச்சி
நன்றாக இருக்கும்.
அப்பொழுதுதான் நல்ல மதிப்பெண்கள்
பெற முடியும்.
நன்றாக படித்தால் தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.
இதற்கு 2கோடி ரூபாய் சம்பளம் பெறும்
சுந்தர் பிச்சை ஒரு நல்ல உதாரணமாக திகழ்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலை நிகழ்ச்சிகள்
அதைத் தொடர்ந்து வண்ணமயமான,
நவீன டிஜிட்டல் ஒளி திரையுடன்
கூடிய அரங்கில்,
நாட்டியம், நாடகம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் 1-வது வகுப்பு முதல் 9-வது வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள்
சிறப்பாக பங்கேற்று, அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.
குறிப்பாக...
‘Healthy Body – Happy Body”
விழிப்புணர்வு நிகழ்வில்
மாணவ, மாணவிகள் பங்கேற்று திறமையாக பேசி நடித்து, பார்வையாளர்களிடையே
உணவு பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
“நீரின்றி அமையாது உலகு”
என்ற பாட்டுக்கு மாணவ. மாணவிகள் சிறப்பாக நடனமாடி உழவின் பெருமை மற்றும் விவசாயத் தொழிலின் உயர்வு
குறித்து பார்வையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.
“தாயவளே தமிழ் மண்ணே –
தூயவளே தமிழ் மொழியே”
என்ற கவிநயமிக்க இனிய பாடலுக்கு
தமிழ்நாட்டின்
பண்பாடு கலாச்சாரத்தை
போற்றும் வகையில்
மாணவ, மாணவிகள்
பாரம்பரிய உடையில் நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்வில்
தலைக்கவசம் அணிவதன் அவசியம்…
இருசக்கரவாகனத்தில்
3 பேர் செல்லக் கூடாது...
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ் ஒலி கேட்டதும் சாலையில் ஒதுங்கி நின்று
ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடவேண்டும்…
என்பது உள்ளிட்ட
பல்வேறு சாலை பாதுகாப்பு விதிகள் கடைபிடிப்பது குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
டிஜிட்டல் ஒளித்திரை மேடையில்
பங்கேற்ற மாணவ, மாணவிகளின்
சிறப்பான நடிப்பும்…
ஆம்புலன்ஸ்
மேடையில் வலம் வந்த தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட
ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் அதன் இயக்கத்தை காட்சிப்படுத்திய
விதமும்…
பார்வையாளர்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தி…
பாராட்டுக்களை பெற்றது.
சிலம்பம்
செயின்ட் சேவியர் பள்ளியில் 9-வது வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்ற
சிலம்பம் விளையாட்டு பார்வையாளர்களை
பிரமிக்க வைத்தது.
அதேபோல குங்ஃபூ, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகள் குறித்த நிகழ்ச்சிகளிலும்
தேசிய ஒற்றுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் சிறப்பாக பங்கேற்றனர்.
இப்படி செயின்ட் சேவியர் பள்ளி
ஆண்டு விழாவில் நடந்த
அனைத்து கலை நிகழ்சிகளும்
கருத்துள்ளதாகவும்,
நாட்டுப்பற்று மிக்கதாகவும்
புதுமையாகவும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த கலை நிகழ்ச்சிகள்
பார்வையாளர்களிடையே
ஆச்சரியத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.
இந்த ஆண்டு விழாவில்
மத்திகிரி புனித ஆரோக்கிய
அன்னை ஆலய பங்கு தந்தை
அருட்பணி கிறிஸ்டோபர்
அவர்கள்
மற்றும்
ஓசூர் மறைவட்ட ஆலயங்களின்
பங்கு குருக்கள்,
அருட்சகோதரிகள்,
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளியின் ஆசிரியர்கள்,
மாணவர்கள்
மற்றும் பெற்றோர்,
பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆண்டுவிழாவை முன்னிட்டு
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளி கட்டடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
-----------------------------------.