"தேர்தல் திருவிழா –
தமிழ்நாட்டின் பெருவிழா"
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026
வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும்
10,040 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு
வாக்குப்பதிவு குறித்து
முதற்கட்ட தேர்தல் பயிற்சி
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் நேரில் ஆய்வு.
கிருஷ்ணகிரி. மார்ச். 28. –
கிருஷ்ணகிரி மாவட்டம்
10, 040
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு
முதற்கட்ட தேர்தல் பயிற்சி
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்- 2026 நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
வேப்பனஹள்ளி
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,
சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
ஓசூர்
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,
ஒசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
ஆகிய இடங்களில்,
சட்டமன்ற பொதுத்தேர்தலில்
பணியாற்ற உள்ள
10,040 வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலர்கள் மற்றும்
வாக்குச்சாவடி
நிலை-1,
நிலை -2,
நிலை-3
அலுவலர்கள்
ஆகிய அலுவலர்களுக்கு நடைபெறும்
முதற்கட்ட பயிற்சி வகுப்புகளை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (28.03.2025)
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின்
உத்தரவின்படி,
நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 -ல்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
தேர்தல் பணியில் ஈடுபடும்
10,040 வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலர்கள் மற்றும்
வாக்குச்சாவடி நிலை-1,
நிலை -2, நிலை-3 அலுவலர்கள்
தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள கணினி மூலம் சுழற்சிமுறையில்
(First Randomization) தேர்வு செய்யப்பட்டு
பணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, இன்று (28.03.2026) கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளான,
51-ஊத்தங்கரை
சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை -1,
நிலை 2 மற்றும் நிலை 3 அலுவலர்கள் என
1,291 அலுவலர்களுக்கு ஊத்தங்கரை,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,
52-பர்கூர்
சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை 1, நிலை-2 மற்றும் நிலை 3 அலுவலர்கள் என 1,713 அலுவலர்களுக்கு பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,
53-கிருஷ்ணகிரி
சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை 1, நிலை- 2 மற்றும் நிலை- 3 அலுவலர்கள் என 2,871 அலுவலர்களுக்கு கிருஷ்ணகிரி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,
54-வேப்பனஹள்ளி
சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை- 1, நிலை 2 மற்றும் நிலை- 3 அலுவலர்கள் என 1,093 அலுவலர்களுக்கு சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,
55-ஒசூர்
சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை- 1, நிலை- 2 மற்றும் நிலை- 3 அலுவலர்கள் என 1,278 அலுவலர்களுக்கு ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,
56-தளி
சட்டமன்ற தொகுதியில்
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை-1,
நிலை- 2 மற்றும் நிலை 3 அலுவலர்கள்
என 1,794 அலுவலர்களுக்கு
தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என மொத்தம்
6 இடங்களில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை- 1,
நிலை- 2 மற்றும் நிலை- 3 அலுவலர்கள்
என 10,040 அலுவலர்களுக்கு
முதற்கட்ட தேர்தல் பயிற்சி
தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சி, இன்று (28.03.2026 சனிக்கிழமை)
காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை-1 ஆகியோருக்கும்,
மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை-2 மற்றும் நிலை-3 ஆகிய அலுவலர்களுக்கும் நடைபெற்றது.
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு
மண்டல அலுவலர்கள்,
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியில் மாதிரிவாக்குச்சாவடி
மையம் அமைத்து
செயல்முறை விளக்கம் மற்றும்
நியமனம் செய்யபட்ட அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்
குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.
தேர்தல் நாளில் பயன்படுத்தப்படும்
படிவங்களை நிரப்புவது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.
மேலும், வாக்குச்சாவடி அலுவலர்களிடமிருந்து தபால் வாக்குகளுக்கான படிவங்கள்
(படிவம் 12) பூர்த்திசெய்து திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வாக்குச்சாவடி அலுவலர்களில்
கர்ப்பிணி பெண்கள் மற்றும்
மாற்றுத்திறனாளிகள்
உள்ளிட்டோருக்கு
விலக்களிக்கப்பட்டும்,
மற்ற நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் அனைவரும் தேர்தல் பணியில் பணியாற்றிட வேண்டும்.
மேலும், உச்சபட்ச மருத்துவ காரணங்களுக்காக விலக்குகோரும் பட்சத்தில்
அரசு மருத்துவ குழுவின்
நேரடி விசாரணையின் மூலம் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
உரிய காரணங்கள் இன்றி தேர்தல் பயிற்சி வகுப்புகளில் கலந்துக்கொள்ளாத
வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டுள்ள அனைவரும் சிறப்பான முறையில் பயிற்சியினை பெற்று தமிழ்நாடு சட்டமன்றபொதுத் தேர்தல் 2026-
அமைதியாகவும்,
பாதுகாப்புகாவும்
நடத்திட முழு ஒத்துழைப்பு
வழங்க வேண்டும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது,
ஒசூர் மாநகராட்சி ஆணையாளர்
திரு.முகமது ஷபீர் ஆலம்
இ.ஆ.ப.,
ஓசூர் சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி
இ.ஆ.ப.,
தனி மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.ராஜா,
வேப்பனஹபள்ளி சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர்
திருமதி.கீதா ராணி,
வட்டாட்சியர்கள்
திரு.குணசிவா,
திரு.ரமேஷ்,
தனி வட்டாட்சியர்கள்
திரு.சண்முகம்,
திருமதி.மகேஸ்வரி,
திரு.சுப்ரமணி,
திரு.இளங்கோ,
மாவட்ட கல்வி அலுவலர்கள்
திருமதி.ரமாதேவி,
திரு. நரசிம்மன்.
மற்றும்
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,
வருவாய் ஆய்வாளர்கள்,
கிராம நிர்வாக அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.