தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல் – 2026
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
56. தளி சட்டமன்ற தொகுதியில்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
வேட்புமனு தாக்கல்
தேன்கனிக்கோட்டை. மார்ச்.30. -
56. தளி சட்டமன்ற தொகுதி
தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல்
மார்ச் 30-ம் தேதி தொடங்கியது.
முதல் நாளில்
நாம் தமிழர் கட்சி சார்பில்
திரு. நரசிம்மா ரெட்டி
என்பவர்
தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்து
தேன்கனிக்கோட்டை
வட்டாட்சியர் அலுவலகத்தில்
உதவி தேர்தல் அலுவலரும்
தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர்
திருமதி.கங்கை
அவர்கள் முன்னிலையில்
உதவி ஆணையர் (ஆயம்)
திரு. பழனி
அவர்களிடம் வேட்புமனுவை
தாக்கல் செய்தார்.
தளி சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி
வேட்பாளர்
திரு. நரசிம்மாரெட்டி
இவர் தேன்கனிக்கோட்டை வட்டம் சி.ஆர்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவர் நிதி கணக்கியலில் கணினி பட்டம் பெற்றுள்ளார்.
சமூக சேவையில்
டாக்டர் அப்துல் கலாம் விருதும்,
அறம் விருதும்
பெற்றுள்ளார்.
--------------------------------------.