புனித வெள்ளி
பெரிய சிலுவை பாதை
பவனி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
மத்திகிரி நூற்றாண்டுகள்
பழமையான புனித ஆரோக்கிய
அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி –
பெரிய சிலுவைப் பாதை பவனி
14 நிலைகளில்
பெரிய சிலுவை
சுமந்து சென்ற இறை மக்கள்
ஓசூர். ஏப்ரல். 04. –
மத்திகிரி நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த
புனித ஆரோக்கிய
அன்னை ஆலயம்
ஓசூர் மாநகராட்சி மத்திகிரி நேதாஜிநகரில் உள்ள
புனித ஆரோக்கிய அன்னை
ஆலயத்தில்
ஏப்ரல் 3-ம் தேதியன்று
புனித வெள்ளிக்கிழமை முன்னிட்டு
பெரிய சிலுவைப்பாதை பவனி
நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி மத்திகிரியில் உள்ள
நூற்றாண்டு பழமைவாய்ந்த
புனித ஆரோக்கிய அன்னை
ஆலயத்தில் ஆண்டுதோறும்
புனித வெள்ளிக்கிழமை அன்று
பெரிய சிலுவைப்பாதை பவனி
நடைபெறுவது வழக்கமாகும்.
புனித வெள்ளி
2026-ம் ஆண்டு ஏப்ரல்
3-ம் தேதியன்று புனித வெள்ளிக்கிழமையன்று
மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பெரிய சிலுவை பாதை பவனி
நடைபெற்றது.
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாதையின் முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில்
சிலுவை பாதையில் 14 நிலைகள் அமைக்கப்பட்டிருந்தது.
மத்திகிரி நேதாஜிநகரில் உள்ள
செயின்ட் சேவியர் பள்ளி வளாகத்தில்
இருந்து பெரிய சிலுவை பாதை பவனி புறப்பட்டது.
முதல் நிலை
பெரிய சிலுவை பாதை பவனியை
ஒசூர் மறைவட்ட முதன்மைகுரு
அருட்தந்தை பெரியநாயகம்
அவர்கள் தலைமை வகித்து
முதல்நிலையில்
பெரிய சிலுவையை சுமந்து சென்று
தொடங்கி வைத்தார்.
இரண்டாவது நிலை
அருட்சகோதரிகள்
பெரிய சிலுவையை சுமந்து சென்றனர்.
மூன்றாம் நிலை
சவேரியார் அன்பியம் இறைமக்கள்
பெரிய சிலுவையை சுமந்து சென்றனர்.
நான்காம் நிலை
பூண்டி மாதா அன்பியம் இறை மக்கள்
பெரிய சிலுவையை சுமந்து சென்றனர்.
ஐந்தாம் நிலை
ஆரோக்கிய மாதா அன்பியம் இறைமக்கள்
பெரிய சிலுவையை சுமந்து சென்றனர்.
ஆறாம் நிலை
பதுவை அந்தோனியார் அன்பியம்
இறைமக்கள் பெரிய சிலுவையை சுமந்து சென்றனர்.
ஏழாம் நிலை
அன்னை தெரேசா அன்பியம்
இறைமக்கள் பெரிய சிலுவையை சுமந்து சென்றனர்.
எட்டாம் நிலை
சலேத் மாதா அன்பியம், இறைமக்கள்
பெரிய சிலுவையை சுமந்து சென்றனர்.
ஒன்பதாம் நிலை
மரியாயின் சேனை அங்கத்தினர்கள்
பெரிய சிலுவையை சுமந்து சென்றனர்.
பத்தாம் நிலை
பங்கு பேரவை குழுவினர்
பெரிய சிலுவையை சுமந்து சென்றனர்.
பதினோராம் நிலை
பாடல் குழுவினர் பெரிய சிலுவையை சுமந்து சென்றனர்.
பனிரெண்டாம் நிலை
வின்சன் தே பால் சபையினர் பெரிய சிலுவையை சுமந்து சென்றனர்.
பதிமூன்றாம் நிலை
மறைக்கல்வி மாணவ, மாணவியர்
பெரிய சிலுவையை சுமந்து சென்றனர்.
பதினான்காம் நிலை
பீட சிறுவர்கள் பெரிய சிலுவையை சுமந்து சென்றனர்.
என ஒவ்வொரு நிலையிலும் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தைச் சேர்ந்த அனைத்து இறை மக்களும் பெரிய சிலுவையை சுமந்து செல்ல
14 நிலைகளின் வழியாக
பெரிய சிலுவை பவனி
புனிதஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நிறைவு பெற்றது.
புனித வெள்ளிக்கிழமை
சிறப்பு திருப்பலி
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
ஓசூர் மறைவட்ட முதன்மை குரு
அருட்தந்தை பெரியநாயகம்
அவர்கள் தலைமையில்
பெரிய வெள்ளிக்கிழமை
சிறப்பு திருப்பலி,
நற்கருணை ஆராதணை மற்றும் மறையுரையுடன் ஜெபவழிபாடு
நடைபெற்றது.
இந்த சிறப்பு திருப்பலியில்
பங்கு தந்தை கிறிஸ்டோபர்,
அருட்தந்தை ஜேம்ஸ்,
அருட்பணி அன்பு
மற்றும் அருட்சகோதரிகள், பாடல் குழுவினர். பங்கு பேரவை மற்றும் இறை மக்கள் திரளாக பங்கேற்றனர்.
------------------------------------.