முப்பெரும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி பேடரப்பள்ளி
அரசு நடுநிலைப்பள்ளியில்
முப்பெரும் விழா
கொண்டாட்டம்
வட்டார கல்வி அலுவலர்கள்
திருமதி. வேதா.
திரு.அன்னையா.
திரு.T.T. ராஜூ.
BRTE
திருமதி காயத்ரி
ஆகியோர் பங்கேற்பு
ஒசூர். மார்ச். 30. –
ஓசூர் ஒன்றியத்தில் உள்ள
பேடரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியில்
1. ஆண்டு விழா
2. மாணவர் சேர்க்கை விழா
3. NMMS தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
இணைந்த முப்பெரும் விழா
கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மாவட்டத்தில்
சிறந்த அரசுப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
பேடரப்பள்ளி, 3-வது வார்டில்
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
இயங்கி வருகிறது.
தரமான கல்வி
இந்தப்பள்ளியில்
1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை
900 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில்
நல்லொழுக்கத்துடன்,
தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
இதனால் இந்த அரசுப்பள்ளி
மாவட்டத்தில் உள்ள
சிறந்த அரசுப்பள்ளிகளில்
முன்னணியில் திகழ்கிறது.
----------------------------------.
புதிய மாணவச் செல்வங்களுக்கு
ரோஜா மலர்
கொடுத்து வரவேற்பு
தேசிய திறனாய்வு தேர்வில்
மாவட்டத்தில் முதலிடம்
குறிப்பாக இங்கு பயிலும் மாணவ, மாணவிகள்...
2025-26 கல்வியாண்டில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில்
8 மாணவர்கள் வெற்றி பெற்று மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்து, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தேசிய திறனாய்வு தேர்வு
(NMMS)
மத்திய அரசால் ஆண்டுதோறும்
நடத்தப்படும் இந்த தேர்வு
2013-2014-ம் கல்வி ஆண்டு முதல்
நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
அன்றுமுதல்
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி
மாணவர்கள் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள்
வெற்றி பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து 13 கல்வி ஆண்டுகளில்
2013- 2014 முதல் நடப்பு கல்வி ஆண்டு
2025-2026 வரை தொடர்ந்து
சுமார் 100 மாணவர்கள்
வெற்றி பெற்றுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
முப்பெரும் விழா
இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்று மாவட்டத்திலேயே சிறந்த அரசு நடுநிலைப்பள்ளியாக திகழும்
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில்
மார்ச் 30-ம் தேதியன்று
1. ஆண்டு விழா
2. மாணவர் சேர்க்கை விழா
3. NMMS தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு
பாராட்டு விழா
என மூன்று விழாக்கள் இணைத்து
முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர்
திரு. பொன்நாகேஷ்
அவர்கள் தலைமை வகித்து
அனைவரையும் வரவேற்று
உரையாற்றினார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவி
திருமதி.விஜி
கல்வியாளர்
திருமதி சுகன்யா,
PTA தலைவர்
திரு.லக்கப்பா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
வட்டார கல்வி அலுவலர்கள்
திருமதி. வேதா,
திரு. அன்னையா
திரு.T.T. ராஜூ
மற்றும்
BRTE
திருமதி. காயத்ரி
ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார்கள்.
பெற்றோர் ஆசிரியர் கழகம்
ஆசிரியர்களை பாராட்டி கவுரவிப்பு
இந்தப் பள்ளி ஆசிரியர்களின்
செயல்பாடுகளை பாராட்டி
பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக
பள்ளியில் பணியாற்றும்
தலைமை ஆசிரியர்-1
பட்டதாரி ஆசிரியர்கள்-6
இடைநிலை ஆசிரியர்கள்-14
சிறப்பு ஆசிரியர்கள்-2
எஸ் எம் சி ஆசிரியர்-1
ஹைடெக் லேப் ஆசிரியர்-1
மாற்றுப் பணி ஆசிரியர்கள்-4
ஆக மொத்தம் 29 ஆசிரியர்களை
இந்த முப்பெரும் விழாவில்
கவுரவப்படுத்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது
ஆண்டறிக்கை
வழக்கமாக ஆசிரியர்கள் வாசிக்கும்
பள்ளியின் ஆண்டறிக்கையை
பேடரப்பள்ளி அரசுப்பள்ளியின்
ஆண்டுவிழாவில்
எட்டாம் வகுப்பு
மாணவி மெலினாஸ்ரீ
சிறப்பாக ஆண்டறிக்கையை வாசித்து
அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
கலை நிகழ்ச்சிகள்
இவ்விழாவில் ஒன்று முதல் 5-வது வகுப்பு வரை
ஆறு கலை நிகழ்ச்சிகளும்
6-வது வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை
ஆறு கலை நிகழ்ச்சிகளும் என மொத்தம்
12 கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த கலை நிகழ்ச்சிகளில்
மாணவ, மாணவிகள்
சிறப்பாக பங்கேற்று
பார்வையாளர்களின் கவனத்தை
கவர்ந்தனர்.
ஒசூர் ரோட்டரி கிளப் ராயல்ஸ்
தலைவர்
திரு. கலையரசன்,
செயலாளர்
திரு. மகேஷ்
ஆகியோர் முப்பெரும் விழாவில்
கலந்து கொண்டு
NMMS தேர்வில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு
வெள்ளி நாணயம்
உட்பட ஐந்து மெகா பரிசு பொருட்களை
வழங்கி பாராட்டினார்கள்.
TTK நிறுவனம் HR மேனேஜர்
திரு.நிர்மல்
அவர்கள் கலந்து கொண்டு
தேசிய திறனாய்வு தேர்வில்
வெற்றிபெற்ற
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி
சிறப்புரையாற்றி ஊக்கப்படுத்தினார்.
SMC
உறுப்பினர்கள் NMMS தேர்வில்
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு
அவர்களின் புகைப்படம் அடங்கிய போட்டோஃப்ரேம் பரிசளித்தனர்.
மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.
டைட்டன்
நிறுவனத்திலிருந்து
திரு.பிரபு
அவர்கள் பங்கேற்று...
NMMS தேர்வில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு குடை மற்றும்
எழுது பொருட்கள்
பரிசாக வழங்கி பாராட்டினார்.
ஒசூர் புத்தக திருவிழா
சார்பில்
2 புத்தகம் பரிசு
முப்பெரும் விழாவில்
ஓசூர் புத்தக திருவிழா உறுப்பினர்
திரு.முருகேஷ் பாண்டியன்
கலந்து கொண்டு
NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இரண்டு புத்தகங்கள் பரிசாக வழங்கி பாராட்டினார்.
ஸ்மார்ட் போர்டுகள்
இந்நன்னாளில்
ஓசூர் மக்கள் சங்கம்
(ஒசூர் பீப்புள்ஸ் சோஸைட்டி)
திரு. பிராசாந்த்
திரு. மணி
திரு. சரவணன்
ஆகியோர்
கலந்து கொண்டு பள்ளிக்கு
மூன்று ஸ்மார்ட் போர்டுகளை
பரிசாக வழங்கினார்கள்.
பாராட்டு
ஓய்வு பெற்ற டெபுட்டி கலெக்டர்
திரு.பிரபாகர்
மற்றும் குடும்பத்தினர்
இந்த விழாவில் கலந்து கொண்டு
தலைமையாசிரியர்,
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தி பேசினார்.
புதிய மாணவர்கள் சேர்க்கை
ரோஜா மலர் கொடுத்து வரவேற்பு
பேடரப்பள்ளி அரசுப்பள்ளி
முப்பெரும் விழாவில்
பள்ளியில் சேர்க்கை பெற வருகை தந்த
புதிய மாணவர்களுக்கு
ரோஜா மலர்
கொடுத்து சிறப்பாக வரவேற்பு
அளிக்கப்பட்டது.
அறுசுவை உணவு
இவ்விழாவில் கலந்து கொண்ட
சுமார் ஆயிரம் மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் அனைவருக்கும்
திரு. சின்னாரெட்டி
குடும்பம் சார்பில்
சுவையான விருந்து வழங்கப்பட்டது.
இந்த விழாவில்
திரு.முருகன்,
திரு.சரவணன்,
திரு. சுந்தரமூர்த்தி,
திருமதி.சரளா,
திருமதி.கோமதி,
திருமதி. சௌமியா,
ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
நன்றியுரை
ஆசிரியை
திருமதி.லட்சுமிபிரியா
முப்பெரும் விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி
உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் ஆண்டுவிழா நடத்த ஆணை பிறக்கப்பட்டு
அதற்காக மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.
அதன்அடிப்படையில்
ஆணை பிறக்கப்பட்ட 3 நாட்களிலேயே
ஒசூர் பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில்
ஆண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு
மார்ச் 30-ம் தேதி ஆண்டு விழா
சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
முப்பெரும் விழா ஏற்பாடுகளை
பள்ளி தலைமை ஆசிரியர்
திரு. பொன் நாகேஷ்
மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
-------------------------------------.