ஒசூரில்
குறைந்த கட்டணத்தில்
டயாலிஸிஸ் மையம் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சி
மத்திகிரி கூட்டு ரோடு அருகே
கெலமங்கலம் சாலையில் அமைந்துள்ள
சிட்டியஸ் (CITIUS)
தனியார் மருத்துவமனையில்
மேக்னம் அரிமா சங்கம் நடத்தும்
குறைந்த கட்டணத்தில்
டயாலிஸிஸ் மையம் திறப்பு விழா.
ஒசூர். மார்ச். 8. –
சிட்டியஸ் (CITIUS)
மருத்துவமனையில்
மேக்னம் அரிமா சங்கத்தின்
குறைந்த கட்டணத்தில்
டயாலிஸிஸ் மையம் திறப்பு
ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட
மத்திகிரி கூட்டு ரோடு அருகே,
கெலமங்கலம் சாலையில் அமைந்துள்ள
சிட்டியஸ் தனியார் மருத்துவமனையில்
ஒசூர் மேக்னம் அரிமா சங்கம்
மேற்பார்வையில்
குறைந்த கட்டணத்தில் இயங்கும்
டயாலிஸிஸ் மையம்
திறக்கப்பட்டுள்ளது.
ஒசூர் மேக்னம்
அரிமா சங்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சியில்
ஒசூர் மேக்னம் அரிமா சங்கம்
இயங்கி வருகிறது.
இந்த சங்கத்தின் சார்பில், அரசுப்பள்ளி,
அரசு மருத்துவமனைகளுக்கு
தேவையான உபகரணங்களை வழங்குவது,
ரத்த தானம் முகாம்கள்,
இலவச கண் சிகிச்சை
மருத்துவ முகாம்கள் நடத்துவது
உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட
உதவிகள் செய்யும் பணியில்
சிறப்பாக சேவையாற்றி
வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக
தற்போது ஒசூர் மத்திகிரியில்
பொதுமக்கன் பயனபெறும் வகையில்
குறைந்த கட்டணத்தில்
டயாலிஸிஸ் மையம்
திறக்கப்பட்டுள்ளது.
குறைந்த கட்டணத்தில்
டயாலிஸிஸ் மையம்
திறப்பு விழா
மத்திகிரி கூட்டுரோடு அருகே
கெலமங்கலம் சாலையில் இயங்கி வரும்
பிரபலமான சிட்டியஸ்
தனியார் மருத்துவமனையில்
மார்ச் 8-ம் தேதியன்று
டயாலிஸிஸ் மையம்
திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு
சிட்டியஸ் மருத்துவமனை
நிர்வாக இயக்குநர்
டாக்டர். தீப்தி ஸ்ரீனிவாஸ்
அவர்கள்
தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக
மேக்னம் அரிமா சங்க
முன்னாள் பன்னாட்டு இயக்குநர்
அரிமா. K. தனபாலன்
அவர்கள்
மேக்னம் அரிமா சங்க
மாவட்ட கவர்னர்
அரிமா. E. விஸ்வநாதன்
அவர்கள்
சுகி ஹோம்ஸ் டிரஸ்ட்
நிறுவனர்
திருமதி. A. ராஜேஸ்வரி
அவர்கள்
ஆகியோர் பங்கேற்று
டயாலிஸிஸ் மையத்தை
திறந்து வைத்தனர்.
முன்னிலை
மேக்னம் அரிமா சங்க
முன்னாள் மாவட்ட கவர்னர்
அரிமா. T. ரவிவர்மா
அவர்கள்,
மேக்னம் அரிமா சங்க
இரண்டாவது துணை மாவட்ட கவர்னர்
அரிமா. டாக்டர். C. மோதிலால்
அவர்கள்
ஒசூர் மேக்னம் அரிமா சங்க தலைவர்
அரிமா. K. ஆறுமுகசாமி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குறைந்த கட்டண சேவை
இந்த டயாலிஸிஸ் மையத்தில்
இதர தனியார் மருத்துவமனைகளை விட
குறைந்த கட்டணத்தில்
டயாலிஸிஸ் செய்யப்படுகிறது.
இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள்
பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
என்று மேக்னம் அரிமா சங்க நிர்வாகிகள்
தெரிவித்துள்ளனர்.
இந்த விழாவில்
திட்ட ஒருங்கிணைப்பாளர்
அரிமா. R. ரவிசங்கர்,
செயலாளர்(நிர்வாகம்)
அரிமா. K. பூபாலன்,
செயலாளர்(செயல் திட்டம்)
அரிமா.S. விவேகானந்தன்,
பொருளாளர்
அரிமா Pa. அருண் லோகேஷ்,
ஆலோசகர்
அரிமா. D.V. ரமீஸ்,
திட்ட தலைவர்
அரிமா. N.கண்ணன்.
மற்றும் பலர் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
-------------------------------.