குருத்தோலை பவனி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
மத்திகிரி நூற்றாண்டுகள் பழமையான
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
புனித வெள்ளி முன்னிட்டு
குருத்தோலை பவனி
ஒசூர். மார்ச்.29. -
மத்திகிரி புனித ஆரோக்கிய
அன்னை ஆலயத்தில்
குருத்தோலை பவனி
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
மத்திகிரி நகரில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமையான புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் முன்னிட்டு குருத்தோலை பவனி நடைபெற்றது.
இந்த பவனியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி
பக்தி கீதம் பாடியபடி பங்கேற்றனர்.
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த
ஆரோக்கிய அன்னை ஆலயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திகிரியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த
பிரசித்தி பெற்ற பாரம்பரிய புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் அமைந்துள்ளது.
இந்த புனித ஆரோக்கிய
அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும்
புனித வெள்ளிக்கிழமை
மற்றும்
கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான
ஈஸ்டர் திருநாள்
முன்னிட்டு குருத்தோலை பவனி நடைபெறுவது வழக்கமாகும்.
நடப்பாண்டில் 2026-ம் ஆண்டு ஏப்ரல்
3-ம் தேதியன்று புனித வெள்ளிக்கிழமை மற்றும்
ஏப்ரல் 5-ம் தேதியன்று ஈஸ்டர் திருநாள் முன்னிட்டு,
கடந்த பிப்ரவரி 18-ம் தேதி
விபூதி புதன்
சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அன்று முதல் கிறிஸ்துவர்களுக்கான
தவக்காலம் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து
பிப்ரவரி 20-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஈஸ்டர் வரை
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
மத்திகிரி புனித ஆரோக்கிய
அன்னை ஆலயத்தை சுற்றிலும்
பங்கு தந்தை
அருட்பணி கிறிஸ்டோபர்
தலைமையில்
சிலுவைப்பாதை ஜெபவழிபாடு மற்றும்
சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது.
மறை மாவட்ட அளவில்
சிலுவை பாதை
தவக்காலம் நான்காம் ஞாயிறு
மார்ச் 15-ம் தேதியன்று
மாலை 4 மணி முதல் 7 மணிவரை
சியோன் மலையில் மறை மாவட்ட அளவில் சிலுவை பாதை நடைபெற்றது.
தொடர்ந்து ஏப்ரல் 3-ம் தேதி புனித வெள்ளிக்கிழமை முன்னிட்டு
மார்ச் 29 -ம் தேதி
ஞாயிற்றுக்கிழமை அன்று
குருத்தோலை பவனி
நடைபெற்றது.
குருத்தோலை பவனி
மத்திகிரி நேதாஜிநகரில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளி வளாகத்தில் இருந்து
புனித ஆரோக்கிய அன்னை
ஆலயம் வரை நடந்த
இந்த குருத்தோலை பவனியை
ஒசூர் மறைவட்ட முதன்மைகுரு
அருட்தந்தை பெரியநாயகம்
தலைமை வகித்து
தொடங்கி வைத்தார்.
இந்த பவனியில்
அருட்சகோதரிகள்,
பங்கு குழுவினர்,
பாடல் குழுவினர், இறை மக்கள்
ஆகியோர் குருத்தோலை ஏந்தி
பக்தி பாடல் பாடியபடி
பவனியாக சென்றனர்.
தொடர்ந்து புதிய ஆலயத்தில்
ஓசூர் மறைவட்ட முதன்மை குரு
அருட்தந்தை பெரியநாயகம்
தலைமையில்
குருத்தோலை சிறப்பு திருப்பலி,
நற்கருணை ஆராதனை மற்றும்
சிறப்பு மறையுரையுடன் ஜெப வழிபாடு நடைபெற்றது.
இதில் அருட்சகோதரிகள், பங்கு பேரவை,
பக்த சபையினர், அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் இறை மக்கள் பங்கேற்றனர்.
--------------------------------.