வேப்பனப்பள்ளி
சட்டமன்ற தொகுதி
கிருஷ்ணகிரி மாவட்டம்,
வேப்பனப்பள்ளி சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட,
சூளகிரியில் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி
விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி
இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள
வேப்பனப்பள்ளி சட்டமன்ற
பொதுப்பார்வையாளர்
திரு.சௌரவ் பாபு சிங்ஹால்
இ.ஆ.ப.,
அவர்கள் (23.03.2026) நேரில் ஆய்வு.
கிருஷ்ணகிரி. மார்ச். 23. -
சூளகிரியில்
100 சதவிகிதம் வாக்களிப்பு -
துண்டு பிரசுரங்கள்
வழங்கி விழிப்புணர்வு
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026 - ஐ முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
வேப்பனப்பள்ளி
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,
சூளகிரி தினசரி காய்கறி சந்தையில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம்,
தேர்தலில் வாக்களிப்பதன்
முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு
துண்டு பிரசுரங்கள் வழங்கி
விழிப்புணர்வு ஏற்படுத்தும்
பணி நடைபெற்றது.
100 சதவிகிதம் வாக்களிப்பு
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் - 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து, பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில்,
மார்ச். 23-ம் தேதியன்று
வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
சூளகிரி தினசரி காய்கறி சந்தையில் உள்ள
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம்,
100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து
துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இப்பணிகளை
வேப்பனப்பள்ளி சட்டமன்ற
பொதுப்பார்வையாளர்
திரு.சௌரவ் பாபு சிங்ஹால்
இ.ஆ.ப.,
அவர்கள் நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது,
சூளகிரி வட்டாட்சியர்
திரு.ரமேஷ்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.கலா,
திருமதி.விஜயா
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
உடனிருந்தனர்.
----------------------------------.