நாகமங்கலம் அரசுப்பள்ளியில்
பாரத சாரண சாரணியர் இயக்கம்
(Bharat Scouts and Guides)
தொடக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் ஒன்றியம்
நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளியில்
பாரத சாரண சாரணியர் இயக்கம்
(Bharat Scouts and Guides)
தொடக்க விழா.
தேன்கனிக்கோட்டை. மார்ச். 18. –
நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள
நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
மாணவர்களிடையே
ஒழுக்கம்,
தேசப்பற்று மற்றும்
சேவை மனப்பான்மையை
வளர்க்கும் நோக்கத்துடன்
சமயசார்பற்ற ஒரு கல்வி சார்ந்த இயக்கமாக
பாரத சாரண சாரணியர் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
பாரத சாரண சாரணியர் இயக்கம்
தொடக்க விழா
நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மார்ச் 18-ம் தேதியன்று
நடந்த தொடக்க விழாவில்
தலைமையாசிரியர் திரு. ஆசிர்வாதம் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக
கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலர்கள்
திரு. பால்ராஜ்,
திரு. லோகேஷ்,
ஆகியோர் பங்கேற்று
சிறப்புரையாற்றினார்கள்.
மிகச்சிறந்த தொடக்கப்பள்ளி
வட்டார கல்வி அலுவலர்கள் பேசும் போது…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
அரசு தொடக்கப் பள்ளிகளில்
நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளி மிக சிறப்பாக
செயல்படும் அரசுப் பள்ளி
என கல்வித்துறை அதிகாரிகள்
பாராட்டினார்கள்.
சீருடையில் 65 மாணவர்கள்
அணிவகுப்பு
நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள
பாரத சாரண சாரணியர் இயக்கத்தில்
மூன்றாம் வகுப்பு
நான்காம் வகுப்பு
ஐந்தாம் வகுப்பு
பயிலும்
65 மாணவ, மாணவிகள்
சீருடை அணிந்து
பாரத சாரண சாரணியர்
இயக்கத்தில் சேர்ந்து கொண்டனர்.
இவ்விழாவினை
பள்ளியின் தலைமை ஆசிரியர்
திரு. ஆசிர்வாதம்.
அவர்கள்
சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார்.
பள்ளியின் உதவி ஆசிரியை
திருமதி. ராஜாமணி
அவர்கள்
நன்றி உரை கூற
விழா இனிதே நிறைவுற்றது.
-----------------------------------.