கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட ஆட்சித்தலைவரும்
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான
திரு. ச. தினேஷ்குமார். இஆப,.
தலைமையில்
ஆலோசனைக் கூட்டம்
அதிகாரிகள் பங்கேற்பு
ஒசூர். மார்ச். 17. –
ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட ஆட்சித்தலைவரும்
தேர்தல் நடத்தும் அலுவலருமான
திரு. ச. தினேஷ் குமார். இஆப,.
அவர்கள் தலைமையில்
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஒசூர் சட்டப்பேரவை தேர்தல்
ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு
ஒசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில்
மார்ச் 17-ம் தேதியன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு
மாவட்ட ஆட்சித்தலைவரும்
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான
திரு. ச. தினேஷ் குமார். இஆப,.
அவர்கள் தலைமை வகித்தார்.
ஆலோசனை கூட்டத்தில்
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்
பேசியதாவது,
தற்பொழுது தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இம்மாதம் 30 ம் தேதி முதல்
வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ளன.
அதற்கான ஆயத்தப் பணிகளில்
அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வாறு அரசியல் கட்சிகள்
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான
நடைமுறைகள்
மற்றும்
வேட்பு மனு மீதான பரிசீலனை,
சின்னம் ஒதுக்குதல்,
வேட்பாளர்கள் தகுதி நீக்கம்
உள்ளிட்ட அம்சங்கள் குறித்து
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்
விரிவான ஆலோசனைகளை
வழங்கினார்.
தொடர்ந்து
தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையான
ஜூஜூவாடி,
TVS சோதனை சாவடிகளை
ஆய்வு செய்து வாகனங்களை
கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் பராமரிக்கும் பதிவேடுகளையும் வாகனங்களையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.தங்கதுரை.
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி. ஆக்ருத்தி சேத்தி IAS
ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர்,
வட்டாட்சியர்
திரு. குண சிவா
சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
திரு.விஜயகுமார்
தனி வட்டாட்சியர்கள்
திரு சண்முகசுந்தரம்
திரு .சுப்பிரமணி
உட்பட வருவாய்த்துறை அலுவலர்கள் காவல்துறையினர் பங்கேற்றனர்.
--------------------------------------------.