கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மற்றும் தளி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட,
சோதனை சாவடிகளில்
வாகன தணிக்கை பணிகளை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் நேரில் பார்வையிட்டு,
ஆய்வு மேற்கொண்டார்.
ஒசூர். மார்ச். 17. –
தமிழ்நாடு சட்டப்பேரவை
பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் சார் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலின்
போது கடைப்பிடிக்க வேண்டிய
தேர்தல் விதிமுறைகள் குறித்து
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்
உதவி தேர்தல் நடத்தும்
அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.பெ.தங்கதுரை
அவர்கள்
ஆகியோர் தலைமையில்
(17.03.2026) நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டம்
இந்திய தேர்தல் ஆணையத்தின்
உத்தரவின்படி,
தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல் -2026 க்கான
வேட்புமனு தாக்கல்
30.03.2026 அன்று முதல் 06.04.2026 வரை நடைபெறயுள்ளதையொட்டி,
ஒசூர் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு
வருகை தரும் வேட்பாளர்களுக்கு,
வேட்பு மனு தாக்கலின் போது
கடைப்பிடிக்க வேண்டிய
தேர்தல் விதிமுறைகள் குறித்து
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்
உதவி தேர்தல் நடத்தும்
அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
ஓசூர் சார் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான
நடைமுறைகள் மற்றும்
வேட்பு மனு மீதான பரிசீலனை,
சின்னம் ஒதுக்குதல்,
வேட்பாளர்கள் தகுதி நீக்கம்
உள்ளிட்ட அம்சங்கள் குறித்து
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து,
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
ஒசூர் சட்டமன்ற தொகுதி,
கர்நாடக மாநில எல்லைக்கு அருகே உள்ள
ஜூஜூவாடி காவல் துறை
சோதனை சாவடியில்
பறக்கும் படையினரால்
மேற்கொள்ளப்பட்டு வரும்
தீவிர வாகன தணிக்கை,
அங்கு பொருத்தப்பட்டுள்ள
சிசிடிவி கேமரா,
வாகனங்கள் வருகை குறித்த
பதிவேடுகளை
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
பாதுகாப்பு அறை
தொடர்ந்து,
ஓசூர் அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரியில்,
சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது பயன்படுத்தப்படும்
வாக்குபதிவு இயந்திரங்கள்,
தேர்தல் பொருட்கள்
பாதுகாப்பாக வைக்கப்படுவதற்கான
அறையை நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து,
ஒசூர் சட்டமன்ற தொகுதி,
கர்நாடக மாநில எல்லையான,
ஒசூர் டிவிஎஸ் சோதனைச்சாவடியில்,
வாகன தணிக்கை,
வாகனங்களை கண்காணிக்கும்
பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள்
பராமரிக்கும் பதிவேடுகளை
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
வாக்குச்சாவடி ஆய்வு
அதனைத்தொடர்ந்து,
பெத்தபேளகொண்டப்பள்ளி
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள
வாக்குச்சாவடி மையத்தில்
குடிநீர்,
கழிப்பறை வசதிகள்,
மின்சார சாய்வு தளம்
உள்ளிட்ட அடிப்படை வசதிகளை
நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து,
தளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட
கும்ளாபுரம் சோதனைச் சாவடியில்,
தீவிர வாகன தணிக்கையை மேற்கொண்டு,
அனைத்து வாகனங்களையும்
முழுமையாக கண்காணித்து
தீவிர வாகன தணிக்கை
மேற்கொள்ள வேண்டும்
என சோதனைச் சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தளி தொகுதியில்
ஆய்வுக்கூட்டம்
தொடர்ந்து,
தேன்கனிக்கோட்டை
வட்டாட்சியர் அலுவலகத்தில்
வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலின் போது கடைப்பிடிக்க வேண்டிய
தேர்தல் விதிமுறைகள் குறித்து
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வின்போது,
தேர்தல் நடத்தும் அலுவலர்/
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி
இ.ஆ.ப.,
தேர்தல் நடத்தும் அலுவலர் /
உதவி ஆணையர் (ஆயம்)
திரு.பழனி,
ஓசூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
திரு.அக்ஷய் அனில் வாகாரே
இ.கா.ப.,
ஒசூர் மாநகராட்சி உதவி ஆணையர்
செல்வி.ஹேமலதா,
வட்டாட்சியர்கள்
திரு.குணசிவா,
செல்வி.கங்கை,
தனி வட்டாட்சியர்கள்
திரு.சண்முகம்,
திரு.விஜயகுமார்,
திரு. சுப்பிரமணி,
திரு. கவாஸ்கர்
மற்றும் காவல் ஆய்வாளர்கள்,
பறக்கும்படை அலுவலர்கள்,
துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
----------------------------------------------.