கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பேடரப்பள்ளி, 3-வது வார்டு
மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்
தேசிய திறனாய்வு தேர்வில்
(NMMS EXAM)
வெற்றி பெற்ற 8 மாணவர்களுக்கு
பாராட்டு விழா.
மாவட்ட கல்வி அலுவலர்
(தொடக்க கல்வி)
திரு. நரசிம்மன்.
அவர்கள்
பரிசுகள் வழங்கி பாராட்டு
ஒசூர். மார்ச். 18. -
தேசிய திறனாய்வு தேர்வில்
பேடரப்பள்ளி அரசுப்பள்ளி
மாணவர்கள் சாதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்தில்
2025-2026 கல்வியாண்டில்
தேசிய திறனாய்வு தேர்வு (NMMS)
எழுதிய மாணவர்களில்
பேடரப்பள்ளி அரசுப் பள்ளி மாணவர்கள்
8 பேர் தேர்ச்சி பெற்று
மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று
சாதனை படைத்துள்ளனர்.
மாவட்டத்தில் மிகச்சிறந்த
அரசு நடுநிலைப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேடரப்பள்ளி,
3-வது வார்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
தரமான கல்வி
இந்தப்பள்ளியில் 1-வது வகுப்பு முதல்
8-வது வகுப்பு வரை
900 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில்
நல்லொழுக்கத்துடன்,
தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
இதனால் இந்த அரசுப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிறந்த அரசுப்பள்ளிகளில் ஒன்றாக திகழ்கிறது.
தேசிய திறனாய்வு தேர்வு
குறிப்பாக இங்கு பயிலும் மாணவர்கள்
தேசிய திறனாய்வு தேர்வில் ஆண்டுதோறும் அதிகளவில் தேர்ச்சிபெற்று வருகின்றனர்.
மாவட்டத்திலேயே முதலிடம்
2025-26 கல்வியாண்டில்
நடந்த தேசிய திறனாய்வு தேர்வில்
பேடரப்பள்ளி அரசுப்பள்ளியைச் சேர்ந்த
8 மாணவர்கள் வெற்றி பெற்று
மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்து,
பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பாராட்டுவிழா
பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு
பாராட்டு விழா மார்ச் 18-ம் தேதியன்று நடைபெற்றது.
தலைமையாசியர்
திரு.பொன் நாகேஷ்
அவர்கள் தலைமை வகித்து
அனைவரையும் வரவேற்று
உரையாற்றினார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக
மாவட்ட கல்வி அலுவலர்
(தொடக்கக் கல்வி )
திரு. நரசிம்மன்.
அவர்கள் பங்கேற்று
சிறப்புரையாற்றினார்.
முன்னதாக
காலை 9.00 மணிக்கு இறைவணக்க
கூட்டத்திற்கு வருகை புரிந்த
மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள்
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை
பாராட்டி வாழ்த்தி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
ஓசூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள்
திருமதி. வேதா
அவர்கள்
திரு.அன்னையா
அவர்கள்
திரு. T. T. ராஜு
அவர்கள்
விழாவில் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார்கள்
அப்போது...
கிருஷ்ணகிரி மாவட்ட
அளவில் நடுநிலை பள்ளிகள் சார்பில்
அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற
ஒரே ஒரு அரசுப்பள்ளி பேடரப்பள்ளி தான்
என்று பாராட்டி பேசி வாழ்த்து தெரிவித்தனர்.
பரிசு - பாராட்டு மழை
வட்டார கல்வி அலுவலர்
திருமதி. வேதா
அவர்கள்
வெற்றி பெற்ற எட்டு மாணவர்களுக்கும்
தலா. 500 ரூபாய் ரொக்க பரிசு,
ஊக்கப் பரிசாக வழங்கி பாராட்டினார்.
அதேபோல ஓசூர் பி.ஆர்.சிக்குட்பட்ட
ஜூஜூவாடி குறுவள மைய
ஆசிரியர் பயிற்றுநர்
திருமதி காயத்ரி
அவர்கள்
நேரில் பள்ளிக்கு வருகை தந்து
தேசிய திறனாய்வு (NMNS EXAM) தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
பள்ளியில் அனைத்து ஆசிரியர்களை பாராட்டினார்கள்.
அதேபோல
காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் இருந்து
ஐந்து பேர் கொண்ட குழு
ஆசிரியர்கள்
பேடரப்பள்ளி அரசுப்பள்ளிக்கு
வருகை தந்து பள்ளியை பார்வையிட்டு
தேசிய திறனாய்வு தேர்வில்
வெற்றி பெற்ற மாணவர்களையும்
ஆசிரியர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்
அதேபோல் பள்ளி அருகில் உள்ள
மூக்கண்டப்பள்ளி
தலைமை ஆசிரியர்
வெற்றி பெற்ற மாணவர்களை
பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
தேசிய திறனாய்வு தேர்வில்
வெற்றி பெற்ற
எட்டு மாணவச் செல்வங்கள்
பெற்ற மதிப்பெண்கள்
1. M. ஜீவன் -132/180
2. S. ராஜவேல்-128/180
3.D.ரவி வர்மா-123/180
4. V. கௌதம்119/180
5. A. வெற்றிவேல்118/180
6. S. மெளினா ஸ்ரீ 114/180
7. M. ஜெயஸ்ரீ110/180
8. U. ஸ்ரீ ரக்ஷா 109/180.
NMMS தேர்வில்
100 மாணவர்கள் வெற்றி பெற்று
சாதனை
NMMS EXAM தேர்வு
அரசு பள்ளி மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்
எட்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டும்
தேர்வு எழுத முடியும்.
ஆண்டுதோறும் மத்திய அரசால்
நடத்தப்படும் இந்த தேர்வு
2013-2014-ம் கல்வி ஆண்டு முதல்
இந்த திட்டம் நடைமுறைக்கு
கொண்டுவரப்பட்டது.
அன்று முதல்
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி
மாணவர்கள் தொடர்ச்சியாக தொடர்ந்து
13 கல்வி ஆண்டுகளில்
2013- 2014 முதல்
நடப்பு கல்வி ஆண்டு 2025-2026 வரை
தொடர்ந்து சுமார் 100 மாணவர்கள்
வெற்றி பெற்றுள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில்
NMMS தேர்வில் வெற்றி பெற்ற
மாணவர்கள் அனைவரும்
ஒன்பதாம் வகுப்பு முதல்
பன்னிரண்டாம் வகுப்பு வரை
ஒவ்வொரு மாதமும் ரூபாய்ஆயிரம் வீதம்
நான்கு ஆண்டுகள் ரூ.48 ஆயிரம்
அரசு கல்வி உதவித் தொகையாக
பெற்றுள்ளார்கள் மற்றும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
வெற்றி தொடர வாழ்த்து
விழாவில் கலந்து கொண்ட அதிகாரிகள்
அடுத்த கல்வியாண்டில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்கள்.
------------------------------------------------------------------------------------.
தினகரன் நாளிதழ்
தேதி - 19 - 03 - 2026.
காலைக்கதிர் நாளிதழ்
தேதி- 19 - 03 - 2026.
தினமலர் நாளிதழ்
தேதி - 19 - 03 - 2026.
சாக்ஷி நாளிதழ்(தெலுங்கு)
தேதி - 19 - 03 - 2026.
இந்த விழாவிற்கு
பள்ளி தலைமை ஆசிரியர்
திரு. பொன் நாகேஷ்
அவர்கள்
மற்றும் SMC தலைவி
திருமதி .விஜி
அவர்கள்
அனைத்து ஏற்பாடுகளையும்
செய்து இருந்தார்கள்.
ஆசிரியர்களுக்கு பாராட்டு
பள்ளியில் பணியாற்றும்
தலைமையாசிரியர்
ஏழு பட்டதாரி ஆசிரியர்கள்
மற்றும்
14 இடைநிலை ஆசிரியர்களை
வாழ்த்தி பாராட்டினார்கள்.
நன்றி உரை
கணித பட்டதாரி ஆசிரியர்
திருமதி. லட்சுமி பிரியா.
அவர்கள் நன்றி உரையாற்றினார்.
----------------------------------------.