கிருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரி,
ஒசூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்
ரூ.6 கோடியே 78 லட்சத்து 99 ஆயிரம்
மதிப்பிலான புதிய திட்ட பணிகள்
துவக்கி வைத்து
மற்றும்
ஓசூர் மாநகராட்சியில்
ரூ.25 லட்சம் மதிப்பிலான
வளர்ச்சி திட்ட பணிகளை
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர்
திரு.அர.சக்கரபாணி
அவர்கள்
திறந்து வைத்தார்.
ஒசூர். மார்ச். 8. –
சூளகிரி, ஒசூர் ஊராட்சி ஒன்றிய
பகுதிகளில் ரூ.6 கோடியே 78 இலட்சத்து
99 ஆயிரம் மதிப்பிலான
புதிய திட்ட பணிகளை
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர்
திரு.அர.சக்கரபாணி
அவர்கள்
துவக்கி வைத்து,
ஓசூர் மாநகராட்சியில்
ரூ.25 இலட்சம் மதிப்பிலான
வளர்ச்சி திட்ட பணிகளை
திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்,
ஒசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒசூர் ஆர்.வி. அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி
உணவு அருந்தும் கூடம் திறப்பு
ஓசூர் மாநகராட்சி
ஆர்.வி.அரசு மேல்நிலைப் பள்ளியில்
ஒசூர் மாநகராட்சி மேயர்
அவர்கள் சொந்த நிதியிலிருந்து
ரூ.25 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாணவர்கள் உணவு அருந்தும் கூடத்தை
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர்
திரு.அர.சக்கரபாணி
அவர்கள் திறந்து வைத்தார்.
விடியல் பயண பேருந்துகள்
ஓசூர் புதிய பேருந்து நிலையத்தில்,
4 வழித்தடங்களில் வழித்தட நீட்டிப்பு
மற்றும் வழித்தட மாற்றத்திற்கான
விடியல் பயண பேருந்துகள் துவக்கி வைத்து,
தொடுதேப்பள்ளி,
தென்றல் நகர்,
கோகுல்நகர்
ஆகிய பகுதிகளில்
புதிய பகுதிநேர
நியாய விலைக்கடைகள்
திறந்து வைத்து,
ஒசூர் ஊராட்சி ஒன்றியம்,
குமுதேப்பள்ளி ஊராட்சியில்,
ரூ.5 கோடியே 24 லட்சம் மதிப்பில்
புதிய திட்ட பணிகளை
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர்
திரு.அர.சக்கரபாணி
அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்,
ஒசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா
ஆகியோர் முன்னிலையில்
07.03.2026 அன்று பூமி பூஜை செய்து
பணிகளை துவக்கி வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அமைச்சர் அவர்கள்,
சூளகிரி ஊராட்சி ஒன்றியம்,
இம்மிடிநாயக்கனப்பள்ளி,
மேலுமலை,
ஆகிய ஊராட்சிகளில்
ரூ.1 கோடியே 18 லட்சத்து 89 ஆயிரம்
மதிப்பில்
ஆழ்துளை கிணறு,
குடிநீர்,
பைப்லைன்,
சிமெண்ட் சாலை,
கல்வெர்ட்,
தடுப்பு சுவர்
உள்ளிட்ட புதிய வளர்ச்சி
திட்ட பணிகளையும்,
காளிங்காவரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு
ரூ.36 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில்
2 கூடுதல் வகுப்பறை கட்டிட கட்டுமான
பணிகளை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து,
ஒசூர் மாநகராட்சி,
ஆர்.வி.அரசு மேல்நிலைப் பள்ளியில்
ஓசூர் மாநகராட்சி மேயர் அவர்கள்
சொந்த நிதியிலிருந்து
ரூ.25 லட்சம் மதிப்பில் புதியதாக
கட்டப்பட்டுள்ள
மாணவர்கள் உணவு அருந்தும்
கூடத்தை திறந்து வைத்தார்.
இவ்வுணவு அருந்தும் கூடத்தில்
மேஜை,
நாற்காலிகள்,
மின் விசிறி,
சில்வர் தட்டுகள்,
குடிநீர் வசதிகள்
செய்யப்பட்டுள்ளது.
மேலும்,
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களின் 73 -வது பிறந்த நாளை
முன்னிட்டு, மரக்கன்றுகளை
நட்டு வைத்தார்.
மேலும்,
ஒசூர் புதிய பேருந்து நிலையத்தில்,
ஓசூர் முதல் சூதாளம் வரை செல்லும்
பேருந்தினை சூடகொண்டபள்ளி வரையும்,
ஓசூர் முதல் பருவீதி வரை
செல்லும் பேருந்தினை
மொரசுப்பட்டி வரையும்,
ஓசூர் முதல் பேரிகை வரை செல்லும்
பேருந்தினை சாப்பரப்பள்ளி வரையும்
வழித்தடங்களை நீட்டித்தும்,
ஓசூர் முதல் மாவத்தூர் வரை செல்லும் பேருந்தினை காரப்பள்ளி உள்சென்று வருதல்
என மொத்தம்
4 வழித்தடங்களில் வழித்தட நீட்டிப்பு மற்றும் மாறுதல் செய்து இயக்கும் விதமாக
மகளிர் விடியல் பயண பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பகுதிநேர நியாய
விலைக்கடைகள்
தொடர்ந்து,
ஒசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
தொடுதேப்பள்ளி,
தென்றல் நகர்,
கோகுல்நகர்
ஆகிய 3 பகுதிகளில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடைகளை திறந்து வைத்து,
60 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
இந்நியாய விலைக்கடைகள் மூலம்
தொடுதேப்பள்ளியைச் சார்ந்த 200 குடும்ப அட்டைதாரர்களும்,
தென்றல் நகர் பகுதியை சார்ந்த
150 குடும்ப அட்டைதாரர்களும்,
கோகுல் நகர் பகுதியை சார்ந்த
152 குடும்ப அட்டைதாரர்களும்
பயனடைவார்கள்.
புதிய திட்டப்பணிகள்
மேலும்,
ஒசூர் ஊராட்சி ஒன்றியம்,
தொரப்பள்ளி அக்ரஹரம் ஊராட்சி,
குமுதேப்பள்ளி கிராமத்தில்,
ஊரக வளர்ச்சித்துறை சார்பாக,
ரூ.5 கோடியே 24 லட்சம் மதிப்பில்
குடிநீர் பணிகள்,
சாலை பணிகள்
உள்ளிட்ட புதிய திட்ட பணிகளை
பூமி பூஜை செய்து பணிகளை
துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில்,
ஒசூர் மாநகராட்சி ஆணையாளர்
திரு.முகமது ஷபீர் ஆலம் இ.ஆ.ப.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி.கவிதா,
மாவட்ட வழங்கல் அலுவலர்
திருமதி.கீதா ராணி,
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்
திரு.நடராஜன்,
கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்
திரு.சிவகுருநாதன்,
ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர்
திரு.மோகனசுந்தரம்,
மாநகராட்சி துணை மேயர்
திரு.ஆனந்தைய்யா,
மாமன்ற உறுப்பினர்கள்
திரு. N.S. மாதேஸ்வரன்,
திரு. ரவி.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
திரு.பி.முருகன்,
முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்
திரு.சுகுமார்,
திரு.யுவராஜ்,
வட்டாட்சியர்கள்
திரு.ரமேஷ்,
திரு.குணசிவா,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.கலா,
திருமதி.விஜயா,
திரு.சிராஜுதின்,
திரு.வெங்கடேசன்,
பள்ளி தலைமையாசிரியர்
திருமதி.வளர்மதி,
பொற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்
திரு.செந்தில் குமார்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
----------------------------------------.