தெப்ப உற்சவம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் தேர்ப்பேட்டையில்
மரகதாம்பாள் உடனுறை
சந்திரசூடேஸ்வரர் கோயில்
தேர்த்திருவிழா முன்னிட்டு
பச்சைக்குளத்தில்
தெப்ப உற்சவம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
சாமி தரிசனம்.
ஒசூர், மார்ச். 5. -
தேர்ப்பேட்டை பச்சைக்குளத்தில்
தெப்ப உற்சவம்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
தேர்ப்பேட்டை பச்சைக்குளத்தில் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்திருவிழாவையொட்டி
தெப்ப உற்சவம்
வெகுவிமர்சையாக நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில் உள்ள
1000 ஆண்டுகள் பழமையான
பிரசித்தி பெற்ற
அருள்மிகு மரகதாம்பாள் உடனுறை
ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயில்
தேர்த்திருவிழா,
தேராட்டம் கடந்த மார்ச் 3-ம் தேதி
நடைபெற்றது.
இதில் லட்சகணக்கான பக்தர்கள்
கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து
சாமி தரிசனம் செய்தனர்.
ராவண வாகன உற்சவம்
தேரோட்டத்தை தொடர்ந்து மார்ச் 4-ம் தேதி
தேர்ப்பேட்டையில் இரவு 10 மணிக்கு
தொடங்கி விடிய, விடிய
ராவண வாகன உற்சவம்
நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில்
மரகதாம்பாள் உடனுறை
சந்திர சூடேஸ்வரர்,
விநாயகர்,
முருகன்
உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி
தேர்பேட்டை வீதிகளில் மேள, தாள வாத்தியத்துடன் வலம் வந்து
பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி
உற்சவம் நடைபெற்றது.
தெப்ப உற்சவம்
மார்ச் 5-ம் தேதி இரவு 7 மணிக்கு
தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில்
தெப்ப உற்சவம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில்
மரகதாம்பாள் உடனுறை
சந்திர சூடேஸ்வரர்
எழுந்தருளி மேள, தாள, வாத்தியத்துடன்
குளத்தை சுற்றி 3 முறை
தெப்பத்தில் வலம் வந்து
பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அப்போது பக்தர்கள்,
ஓம் நமச்சிவாயா,
ஓம் நமச்சிவாயா,
ஹர ஹர மகாதேவா
என்று பக்தி முழக்கம் எழுப்பியபடி
சுவாமி தரிசனம்செய்தனர்.
தெப்ப உற்சவம் வலம் வரும் போது
பச்சைக்குளக்கரை படிக்கட்டுகளில்
அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
பூஜைப்பொருட்களை வழங்கி
சாமி வழிபாடு நடத்தினர்.
மேலும் பக்தர்கள்
வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி
குளத்தில் விட்டும்...
நவதானியங்கள் ,
உப்பு
போன்ற பொருட்களையும்
பச்சை குளத்தில் தூவியும்
தெப்ப உற்சவத்தை தரிசித்தனர்.
இந்த தெப்ப உற்சவத்தில்
சிறப்பு பூஜைகள்
தலைமை அர்ச்சகர்
திரு. ச.வாச்சீஸ்வர குருக்கள்
தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
தெப்ப உற்சவ விழா ஏற்பாடுகளை
செயல் அலுவலர்
திரு.க. சின்னசாமி
மற்றும்
தேர்த்திருவிழா கமிட்டி தலைவர்
திரு. K.A.மனோகரன்
Ex.MLA
மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள்
சிறப்பாக செய்திருந்தனர்.
தெப்ப உற்சவத்தில்
மாநகர பொது சுகாதார குழு தலைவர்
திரு. N.S. மாதேஸ்வரன்
பாஜக முன்னாள் மாவட்ட தலைவர்
திரு. நாகராஜ்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி,
பலத்த போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டிருந்தது.
தீயணைப்பு துறை
தெப்ப உற்சவத்தை முன்னிட்டு
தீயணைப்பு துறையினர்
தெப்பக்குளம் முழுவதும்
ரப்பர் படகில் கண்காணித்து
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில்
தேர் பேட்டை தேர்கவுண்டர்கள்,
தேர் பேட்டை பொதுமக்கள், பக்தர்கள்
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
-------------------------------------------.