மரகதாம்பாள் உடனுறை
சந்திரசூடேஸ்வரர் கோயிலில்
தேர்த்திருவிழா - கொடிறே்றம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
1000 ஆண்டுகள் பழமையான
பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான
மரகதாம்பாள் உடனுறை
சந்திரசூடேஸ்வரர் கோயிலில்
தேர்த்திருவிழா
கொடியேற்றத்துடன்
தொடங்கியது.
ஒசூர், பிப். 26. -
தேர்த் திருவிழா
கொடியேற்றத்துடன்
தொடங்கியது.
ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது அமைந்துள்ள
பிரசித்தி பெற்ற
1000 ஆண்டுகள் பழமையான
மரகதாம்பாள் உடனுறை
சந்திரசூடேஸ்வரர் கோயிலில்
தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன்
தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
தேர்ப்பேட்டை மலை மீது அமைந்துள்ள
பிரசித்தி பெற்ற மரகதாம்பாள் உடனுறை
சந்திரசூடேஸ்வரர் கோயிலில்
ஆண்டுதோறும் மாசி மாதத்தில்
தேர்த் திருவிழா வெகு சிறப்பாக
கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
அதே போல இந்தாண்டு மார்ச் 3-ம் தேதியன்று தேர்திருவிழா நடைபெறுவதையொட்டி
பிப். 24-ம் தேதியன்று
அங்குரார்ப்பணம் நடைப்பெற்றது.
இதனை தொடர்ந்து 25-ம் தேதி
மலைக்கோயிலில் இருந்து
விநாயகர்,
சந்திரசூடேஸ்வரர்
மரகதாம்பாள்
ஆகிய உற்சவர்களை கீழேகொண்டு வந்து
மலை அடிவாரத்தில் உள்ள
கல்யாண சூடேஸ்வரர் கோயிலில் வைத்து
சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையில்
தலைமை அர்ச்சகர்
திரு. வாச்சீஸ்வர குருக்கள்
உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள்
செய்தார்.
கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம்
பின்னர் வேதமந்திரங்கள் முழங்க
கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகங்களும்,
பூஜைகள் செய்து, பக்தி முழக்கத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்
கலந்துகொண்டனர்.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு
தினமும் பல்வேறு வாகனத்தில்
சந்திரசூடேஸ்வரர் எழுந்தருளி
பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
சிம்மவாகனம்
மார்ச் 25-ம் தேதி இரவு சந்திரசூடேஸ்வரர் சிம்மவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இது குறித்து
இந்து அறநிலையத்துறை
செயல் அலுவலர்
திரு. சின்னசாமி
அவர்கள் கூறியதாவது,
தேர் திருவிழா நடைபெறும் மார்ச் 3-ம் தேதியன்று சூரிய கிரகணம் வருவதால்,
காலை 6 மணிக்கு தேர் இழுக்கும்
நிகழ்ச்சி தொடங்கி விடும்.
மதியம் 1 மணிக்கு மேல் கோயில்
நடை சாற்றப்பட்டு,
பக்தர்கள் கோயிலுக்குள்
அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அன்னதானம்
மேலும் தேர் திருவிழா அன்று
மதியம் பக்தர்களுக்கு அன்னதானம்
வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
அன்னதானம் வழங்க விருப்பமுள்ளவர்கள்
அடுத்த நாள் 4-ம் தேதி வழங்கலாம்.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தேர்த் திருவிழாவையொட்டி கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்.
பக்தர்கள் சிரமமின்றி வந்து சாமி தரிசனம்
செய்ய அனைத்து ஏற்படுகளும் செய்யப்படும்.
விஐபி பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்களுக்கு ஒத்தழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
----------------------------------.