கோரிக்கை வைத்த
2 மணி நேரத்தில்
தடகள வீராங்கணையின்
மாற்றுத்திறனாளி தாய்க்கு
வீட்டுமனை பட்டா
கிருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரியைச் சேர்ந்த தடகள வீராங்கணை
கல்லூரி மாணவியின் கோரிக்கையை ஏற்று
2 மணி நேரத்தில்
மாணவியின் மாற்றுத்திறனாளி தாய்க்கு
வீட்டுமனை பட்டா வழங்கிய
மாண்புமிகு தமிழ்நாடு
துணை முதலமைச்சர்
திரு. உதயநிதி ஸ்டாலின்
அவர்களுக்கு பாராட்டு
கிருஷ்ணகிரி. மார்ச். 14. -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
மார்ச் 13-ம் தேதியன்று நடைபெற்ற
அரசு நலத்திட்ட உதவிகள்
வழங்கும் விழாவில் பங்கேற்ற
மாண்புமிகு தமிழ்நாடு
துணை முதலமைச்சர்
திரு. உதயநிதி ஸ்டாலின்
அவர்களை
கல்லூரி கல்வி பயின்று வரும்
பதக்கங்கள் வென்ற
தடகள வீராங்கணையான
கிருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரி கீழ்பேட்டையைச் சேர்ந்த
செல்வி திவ்யா
மாற்றுத்திறனாளியான
தனது தயார் திருமதி சங்கீதா அவர்களுடன் சந்தித்து
தங்களின் குடும்பத்திற்கு
வீட்டுமனை பட்டா வேண்டி
மனு அளித்தார்.
2 மணி நேரத்தில் தீர்வு
இந்த மனு மீது உடனடியாக
நடவடிக்கை மேற்கொண்ட
துணை முதலமைச்சர் அவர்கள்
மனு அளித்த 2 மணி நேரத்திற்குள்
தான் தங்கியிருந்த பொதுப்பணித்துறை
பயணியர் மாளிகையில்
மாற்றுத்திறனாளி தாயாரிடம்
வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையை
துணை முதலமைச்சர்
திரு. உதயநிதி ஸ்டாலின்
அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு. ஒய். பிரகாஷ்,
திரு. தே. மதியழகன்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார் இ.ஆ.ப.,
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு. அ. சாதனைக்குறள்
மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின்
பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
இந்த நிகழ்வு குறித்து
மாண்புமிகு தமிழ்நாடு
துணை முதலமைச்சர்
திரு. உதயநிதி ஸ்டாலின்
அவர்கள் தனது
சமூக வலைத்தளப் பதிவில்
கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரி கீழ் பேட்டையைச் சேர்ந்த
கல்லூரி மாணவி தங்கை திவ்யா.
கிருஷ்ணகிரியில் இன்றைய தினம் மாலை,
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்
நாம் பங்கேற்ற போது, கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில், அவர் தடகள போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களைக் குவித்து வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.
மாற்றுத்திறனாளியான அவருடைய தாயார் திருமதி.சங்கீதாவின் ஊக்குவிப்பில், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருவதாக கூறிய திவ்யா, அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வேண்டும் என்று கோரி இருந்தார்.
அவர் கோரிக்கை விடுத்த 2 மணி நேரத்தில்,
மாண்புமிகு முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின்
அவர்களின் வழிகாட்டுதலின்படி,
மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை,
அவரது தாயார் சங்கீதாவிடம் வழங்கி வாழ்த்தினோம்.
குரலற்றவர்களின் குரலாக திகழும்
நம் திராவிட மாடல் அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த
தங்கை திவ்யா மற்றும் அவரது தாயார் சங்கீதாவின் அன்பில் நெகிழ்ந்தோம்.
அவர்களுக்கு என்றும் துணை நிற்போம்!
இவ்வாறு துணைமுதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
-----------------------------------.