தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
கரூர் மாநகரில்
முப்பெரும் விழா
செ.மு. ஐயாவின்
90-வது பிறந்தநாள் விழா
மகளிர் தின விழா
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்
குடும்ப விழா
செ.மு. ஐயாவிற்கு 90வது பிறந்தநாள்
வாழ்த்து தெரிவித்த
தமிழ்நாடு முதலமைச்சர்
கரூர் எம்எல்ஏ
திரு. V. செந்தில்பாலாஜி
சிறப்புரையாற்றுகிறார்.
ஒசூர். பிப். 26. –
கரூர் மாநகரில்
முப்பெரும் விழா
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில்
கரூர் மாநகரில்
செ.மு. ஐயாவின் 90-வது பிறந்தநாள் விழா
மகளிர் தின விழா
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் குடும்ப விழா
ஆகிய மூன்று விழாக்களும் இணைந்த
முப்பெரும் விழாவாக
சிறப்பாக நடைபெற உள்ளது.
இடம் -
இந்த முப்பெரும் விழா
கரூர் மாநகரில் உள்ள
தாந்தோன்றிமலை, R.T.0. ஆபீஸ் எதிரில் உள்ள
V.R.S. வேல் மஹால் அரங்கில்
பிப்ரவரி 28-ம் தேதி சனிக்கிழமையன்று
காலை 9.30 மணி முதல் நடக்கிறது.
முதலமைச்சர் வாழ்த்து செய்தி
இந்த முப்பெரும் விழாவை முன்னிட்டு
பொதுச்செயலாளர்
திரு.செ.முத்துசாமி Ex.MLC.
அவர்களின்
90-வது பிறந்தநாளுக்கு
தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு. க. ஸ்டாலின்
அவர்கள் அனுப்பியுள்ள
வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரும்,
தமிழ்நாடு சட்ட மேலவையின்
முன்னாள் உறுப்பினருமான
திரு. செ. முத்துசாமி அவர்களின்,
90-வது பிறந்தநாள் வரும் 28-02-2026 அன்று
கரூரில் கொண்டாடப்படுவதை
அறிந்து மகிழ்ந்தேன்.
திரு. செ. முத்துசாமி அவர்கள்
ஆசிரியர்களின் நலம் காக்கும் இயக்கப்பணியில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்.
மேலும், கல்வித்துறையிலும்,
சமூகப்பணிகளிலும் அவர் ஆற்றியுள்ள அரிய சேவைகள் பாராட்டுதலுக்கு உரியவை.
அவருடைய வாழ்நாள் பணிகளை நினைவு கூர்ந்து சிறப்பு மலர் வெளியிடுவது மகிழ்வளிக்கிறது.
இந்த சீரிய பணியினை மேற்கொள்ளும்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
நிர்வாகிகளுக்கும், மலர்க்குழுவினருக்கும்
எனது உளம் கனிந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு. செ. முத்துசாமி அவர்கள் மேலும் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து,
கல்விசார் பணிகள் உள்ளிட்ட சேவைகளைச் சிறப்புறத் தொடர வேண்டும்
என்று உளமார வாழ்த்துகிறேன்.
அன்புடன்
மு.க. ஸ்டாலின்.
இவ்வாறு முதலமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.
சிறப்பு மலர்
இந்த முப்பெரும் விழாவில்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரும்,
தமிழ்நாடு சட்ட மேலவையின்
முன்னாள் உறுப்பினருமான
திரு.செ.முத்துசாமி
Ex.MLC.
அவர்களின்,
வாழ்நாள் பணிகள் மற்றும் சாதனைகளை
நினைவு கூர்ந்து
சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது.
சிறப்புரை
முப்பெரும் விழாவில்
கரூர் எம்எல்ஏ
திரு.V.செந்தில்பாலாஜி.
அவர்கள்
பொதுச்செயலாளர்
திரு.செ.முத்துசாமி.
Ex.MLC.
அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து
சிறப்புரையாற்றுகிறார்.
பாராட்டுரை
ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கல்விக்குழுமங்களின் நிறுவனர்
மற்றும்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டங்களின்
மேனாள் மாவட்டச் செயலாளர்
திரு.வே.சந்திரசேகரன்.
அவர்கள்
பொதுச்செயலாளர்
திரு.செ.முத்துசாமி.
Ex.MLC.
அவர்களுக்கு
பொன்னாடை அணிவித்து பாராட்டி உரையாற்றுகிறார்.
ஒசூர் கல்வி மாவட்டம்
இந்த முப்பெரும் விழாவில்
ஒசூர் கல்வி மாவட்டத்தில் இருந்து
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்
மாநில துணைத்தலைவர்
திரு. பொன்நாகேஷ்
தலைமையில் 50 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
கலந்து கொள்கின்றனர்.
இதற்காக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள
அனைத்து மாவட்டங்களில் இருந்தும்
சுமார் 2000-க்கும் மேற்பட்ட
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்
நிர்வாகிகள், ஆசிரியர்கள்
இந்த முப்பெரும் விழாவில்
பங்கேற்க உள்ளனர்.
கரூர் மாவட்ட கிளை சார்பில்
சிறப்பான ஏற்பாடுகள்
முப்பெரும் விழாவுக்கு வருகை தரும்
அனைவரையும் வரவேற்று
சிறப்பிக்கும் வகையில்
கரூர் மாவட்ட கிளை சார்பில்
நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
--------------------------------.