தளி சட்டமன்ற தொகுதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
வேட்பாளர்
டி இராமச்சந்திரன்
கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன்
ஊர்வலமாக சென்று
தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர்
அலுவலகத்தில்
வேட்புமனு தாக்கல்.
திமுக கூட்டணி 180 இடங்களுக்கு
மேல் வெற்றி பெறும்,
7-வது முறையாக திமுக ஆட்சி
அமைக்கும் என --
டி.இராமச்சந்திரன்.
பேட்டி
தேன்கனிக்கோட்டை. ஏப்ரல். 02. –
கிருஷ்ணகிரி மாவட்டம்
தளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
வேட்பாளர்
டி.ராமச்சந்திரன்
இன்று(02.04.2026)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும்
திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி கட்சியினரோடு
ஊர்வலமாக சென்று
தேன்கனிக்கோட்டை
வட்டாட்சியர் அலுவலகத்தில்
தேர்தல் நடத்தும் அலுவலர்
திரு. பழனி
அவர்களிடம்
தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது திமுக கட்சியின்
கிருஷ்ணகிரி மேற்கு
மாவட்ட செயலாளர்
ஒய்.பிரகாஷ்
மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்
வேட்பாளர் டி.இராமச்சந்திரன்
கூறியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சரின்
5 ஆண்டு கால திட்டங்கள்
தமிழ்நாட்டின் அனைத்து
குக்கிராமங்களுக்கும் வீடுகளுக்கும் சென்றடைந்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள
தேர்தல் வாக்குறுதிகள்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும்
எளிய மக்களின்
வாழ்வாதாரத்திற்கும்
விளிம்பு நிலை மக்கள்
பழங்குடியின மக்கள்
தொழிலாளர்கள்
ஆகியோரின்
மேம்பாட்டை உயர்த்துவதாக உள்ளது.
இவை அனைத்தும்
மதசார்பற்ற ஜனநாயக வேட்பாளர்கள்
வெற்றிக்கு உதவுவதாக உள்ளது.
தமிழ்நாடு அமைதியான மண் ஆகும்,
மத சார்பின்மைக்கு இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
தமிழ்நாட்டில் மதவாத சக்திகளை
ஒருபோதும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல வரும் தேர்தலிலும்
மக்கள் மதவாத வகுப்புவாத சக்திகளை தோற்கடிப்பார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி
180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று
திமுக 7 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின்
2வது முறையாக முதலமைச்சராக
பொறுப்பு ஏற்பார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,
தளி தொகுதியானது 3000 அடி உயரமுள்ள பகுதியாகும்.
இங்கு சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் மலர்களை பாதுகாக்க
குளிர்சாதன கிடங்குகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் வருங்காலத்தில் எடுக்கப்படும்.
தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள
கோலட்டி என்ற இடத்தில்
850 ஏக்கர் பரப்பளவில் அரசு நிலத்தில்
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த தொழில்பேட்டையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை
ஏற்கனவே நமது முதலமைச்சருக்கு வழங்கியுள்ளோம்.
அந்த கோரிக்கையும் வருங்காலத்தில் நிச்சயமாக நிறைவேற்றி தருவோம் என்று தெரிவித்தார்.
தளி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பலமாக உள்ளது.
கடந்த முறை 56,000 வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
இந்த முறை 75 ஆயிரம் வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என
டி.ராமச்சந்திரன்
அவர்கள் தெரிவித்தார்.
----------------------------------------.