கிருஷ்ணகிரி. மார்ச். 4. -
கேந்திரிய வித்யாலயாவில்
ஒப்பந்த ஆசிரியர் நியமனத்திற்கு
நேர்காணல்
கிருஷ்ணகிரி மாவட்டம்
கேந்திரிய வித்யாலயாவில்
2026 – 2027 – காலகட்டத்தில்
ஒப்பந்த ஆசிரியர்
நியமனத்திற்கான நேர்காணல்
(முற்றிலும் தற்காலிகமானது)
மார்ச் 13-ம் தேதி வெள்ளிக்கிழமை
காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை
நடைபெறுகிறது.
இடம் – கேந்திரிய வித்யாலயாஸ்,
கிருஷ்ணகிரி,
கங்கலேரி – 635122.
ஒப்பந்த ஆசிரியர் பணிகள் மற்றும்
தேவையான கல்வி மற்றும் பிற தகுதிகள்.
1. பிரைமரி டீச்சர்
(Primary Teacher)
தகுதிகள்...
50 சதவீதம் மதிப்பெண்களுடன்
சீனியர் செகண்டரி ஸ்கூல் சான்றிதழ்.
அல்லது
50 சதவீதம் மதிப்பெண்களுடன்
இடைநிலை. அல்லது
அதற்கு இணையான கல்வி தகுதி.
கல்வியில் டிப்ளமோ.
அல்லது
அடிப்படை ஆசிரியர் பயிற்சி
( 2 ஆண்டுகள்) சான்றிதழ்.
அல்லது
தொடக்கக் கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
NCTE வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி CBSE நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (CTET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியிலும் கற்பிக்கும் திறன்.
விரும்பத்தக்கது – கணினி பயன்பாடு
குறித்த அறிவு.
ஊதியம் – KVS விதிகளின்படி
2. கணினி பயிற்றுவிப்பாளர்
(முதன்மை)
Computer Instructor (Primary)
தகுதிகள்...
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்
பி.இ, பி.டெக் (கணினி அறிவியல்)/
பி.சி.ஏ. / எம்.சி.ஏ./ எம்எஸ்.சி. (கணினி அறிவியல்)
எம்.எஸ்.சி (கணினி அறிவியல் கூறுகளுடன்மின்னணுவியல்)/
எம்.எஸ்.சி.(ஐடி)/ பி.எஸ்.சி(கணினி அறிவியல்)
அல்லது
அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில்
கணினி பயன்பாட்டில் முதுகலைப்பட்டத்துடன்
ஏதேனும் அறிவியல் பாடத்தில் இளங்கலை/ முதுகலை பட்டம்/
ஊதியம் – KVS விதிகளின்படி.
3. இசை ஆசிரியர்
Music Teacher
தகுதிகள்...
50 சதவிகிதம் மதிப்பெண்களுடன் சீனியர் செகண்டரி ஸ்கூல் சான்றிதழ்.
அல்லது
50 சதவிகிதம் மதிப்பெண்களுடன் இடைநிலை
அல்லது அதற்கு இணையான படிப்பு மற்றும்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இசையில் இளங்கலை பட்டம்.
அல்லது அதற்கு இணையான படிப்பு
ஊதியம் – KVS விதிகளின்படி.
4. செவிலியர்
Nurse.
தகுதிகள்...
நர்சிங்கில் டிப்ளமோ பட்டம்.
ஊதியம் –KVS விதிகளின்படி.
5. சிறப்புக்கல்வியாளர்
Special Educator &
Counsellor
தகுதிகள்...
பி.ஏ., பி.எஸ்.சி உளவியல் படிப்புடன் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில் டிப்ளமோ சான்றிதழ் விரும்பத்தக்கது.
பள்ளியில் மாணவர்களுக்கு
தொழில்கல்வியில் ஆலோசனை
வழங்குவதில் குறைந்த பட்சம்
ஒரு வருட அனுபவம்.
அல்லது
வேலைவாய்ப்பு பணியகங்களில்
பணி அறிவு மற்றும் அனுபவம்,
அல்லது
இந்திய மறுவாழ்வு கவுன்சிலில்
தொழில் ஆலோசகராக பதிவு செய்தல்.
ஊதியம் – KVS விதிகளின்படி.
மேலும் தகவலுக்கு
வலைத்தளம் –
http;// www.kvs.ac.in
மின்னஞ்சல் –
kendriyavidyalayakrishnagiri@gmail.com
தொலைபேசி எண் -
04343 – 202003.
----- முதல்வர்
கேந்திரிய வித்யாலயா
கிருஷ்ணகிரி - 635 122.
---------------------------------.