கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் ஒன்றியம்
தொட்ட பேளுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
தளி தொகுதி
திரு. டி.ராமச்சந்திரன்.MLA
அவர்கள் நேரில் ஆய்வு
மாணவர்களின் வாசிப்பு திறனை
கேட்டறிந்தார்.
தேன்கனிக்கோட்டை. மார்ச். 4. –
தொட்டபேளுர் அரசுப்பள்ளியில்
தளி எம்எல்ஏ ஆய்வு
கெலமங்கலம் ஒன்றியம்
தொட்டபேளுரில் அமைந்துள்ள
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு
தளி சட்டமன்ற உறுப்பினர்
திரு. டி.ராமச்சந்திரன் MLA
அவர்கள் மார்ச்.4-ம் தேதியன்று
வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வகுப்பறைகளுக்கு சென்று பார்வையிட்ட எம்எல்ஏ,
மாணவ, மாணவிகளிடம்
வாசிப்பு திறன் குறித்து கேட்டறிந்தார்.
மாணவ, மாணவிகளும்
எம்எல்ஏ முன்பு பாடபுத்தகத்தை
நன்றாக வாசித்தனர்.
அதைத்தொடர்ந்து
மாணவர்களையும், ஆசிரியர்களையும்
பாராட்டிய எம்எல்ஏ,
நல்ல அறிவுரைகளையும் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது
பள்ளி தலைமையாசிரியர்
திரு. K. வெங்கடேசலு
மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
------------------------.