10 மற்றும் 12ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர்
வாழ்த்து
கிருஷ்ணகிரி மாவட்டம்
10 மற்றும் 12ஆம் வகுப்பு
பொதுத்தேர்வை எதிர்கொள்ள தயாராகி வரும்
மாணவர்கள் அனைவரும் சிறப்பாக தேர்வெழுதி
அதிக மதிப்பெண்கள் பெற்று
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இஆப.
அவர்கள்
வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி. மார்ச். 01. –
மாவட்ட ஆட்சித்தலைவர்
வாழ்த்து மடல்
அன்புள்ள மாணவ, மாணவியர்களே,
உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்,
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள தயாராகி வரும் மாணவர்களுக்கும் அவர்களுக்காக உழைக்கும் ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பொதுத்தேர்வு என்பது உங்கள் கல்விப் பயணத்தில் முக்கியமான மைல் கல்லாகும்.
இது உங்கள் அறிவையும், உழைப்பையும், ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தும் சிறந்த வாய்ப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தேர்வுக் குறித்த பயமோ, பதற்றமோ இன்றி, நேரத்தை முறையாக திட்டமிட்டு தேர்வறையில் வினாத்தாள்களை அமைதியாக வாசித்து புரிந்து கொண்டு பதிலளிக்க வேண்டும்.
கடந்த ஓராண்டாக நீங்கள் எடுத்த முயற்சிகள் மற்றும் கடின உழைப்பு இந்த பொதுத் தேர்வில் நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
மேலும் தேர்வு நாட்களில் உடல்நலத்தையும்,
மன நலத்தையும் பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம்.
உங்களை நல்வழிப்படுத்தி
வெற்றியை நோக்கி அழைத்து செல்லும்
ஆசிரியர்கள் மற்றும்
கல்வி அலுவலர்களின் அர்ப்பணிப்பு மிக்க வழிகாட்டுதல்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு என்றும் அடித்தளமாக இருக்கும்.
நீங்கள் அனைவரும் சிறப்பாக தேர்வெழுதி
அதிக மதிப்பெண்கள் பெற்று
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு
பெருமை சேர்ப்பீர்கள் என்று
நான் முழுமையாக நம்புகிறேன்.
"வெற்றி நிச்சயம்"
"தன்னம்பிக்கையுடன்
தேர்வை எதிர்கொள்ளுங்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ் குமார். இஆப.
அவர்கள் தனது வாழ்த்து மடலில்
தெரிவித்துள்ளார்.