ஒசூர் மாநகராட்சியில்
தேர்த்திருவிழா
வரலாற்று சிறப்புமிக்க
ஒசூர் மரகதாம்பிகை உடனுறை
சந்திரசூடேஸ்வரர் கோயில்
தேரோட்டம்
(பிரம்ஹ தேர் உற்சவம்)
சந்திரகிரகணத்தை முன்னிட்டு
காலை 6 மணிக்கு
தொடங்கிய தேரோட்டம்
3 மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஒசூர். மார்ச். 3. -
ஒசூரில் தேர்த்திருவிழா
தேரோட்டம்
மார்ச் 3-ம் தேதியன்று
சந்திர கிரகணத்தை முன்னிட்டு
காலை 6மணிக்கு தொடங்கிய
மரகதாம்பாள் உடனுறை
சந்திரசூடேஸ்வரர் கோயில்
தேரோட்டத்தில்
1 லட்சத்திற்கும் அதிகமான
பக்தர்கள் கலந்து கொண்டு
தேர் வடம் பிடித்து இழுத்து
சுவாமி தரிசனம் செய்தனர்.
அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில்
மரகதாம்பாள் உடனுறை
சந்திரசூடேஸ்வரர் எழுந்தருளி
பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அருள்மிகு
மரகதாம்பாள் உடனுறை
சந்திரசூடேஸ்வர சுவாமி
மலைக்கோவில்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சியில்
1000ஆண்டுகள் பழமையான
பிரசித்தி பெற்ற
அருள்மிகு
மரகதாம்பாள் உடனுறை
சந்திரசூடேஸ்வர சுவாமி
மலைக்கோவில்
அமைந்துள்ளது.
பால்கம்பம்
இந்த கோயிலில் ஆண்டுதோறும்
மாசி மாதத்தில் தேர்த்திருவிழா
சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நடப்பாண்டில் தேர்த்திருவிழா முன்னிட்டு கடந்த ஜனவரி 30-ம் தேதி
பால் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன்
தேர் கட்டும் பணிகள் தொடங்கியது.
திருக்கொடியேற்றம்
அதைத்தொடர்ந்து
பிப்ரவரி 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது.
அன்றுமுதல் தினந்தோறும்
இந்த தேர்த்திருவிழாவின்
சிறப்பு பூஜைகளான
சிம்ம வாகன உற்சவம்,
மயில் வாகன உற்சவம்,
நந்தி வாகன உற்சவம்,
நாக வாகன உற்சவம்,
ரிஷப வாகன உற்சவம்,
திருக்கல்யாண உற்சவம்,
யானை வாகன உற்சவம்,
ஆகிய சிறப்பு உற்சவங்கள் நடைபெற்றது.
மார்ச் 3-ம் தேதியன்று
தேர்த்திருவிழாவின்
சிறப்பு நிகழ்வான
பிரம்ஹ தேர் உற்சவம்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு
காலை 6 மணிக்கு சிறப்பாக
நடைபெற்றது.
பிரம்ஹ தேரோட்டம்
மலைக்கோயிலின் அடிவாரத்தில்
உள்ள தேர்ப்பேட்டையில்
அமைந்துள்ள கல்யாண சூடேஸ்வரர்
கோயில் முன்பு பிரம்ஹ தேரோட்டம்
காலை 6 மணிக்கு தொடங்கியது.
இந்த தேரோட்டத்தை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார் இஆப,
கிருஷ்ணகிரி எம்.பி.
திரு. K. கோபிநாத்,
ஒசூர் எம்.எல்.ஏ.
திரு. ஒய்.பிரகாஷ்,
ஓசூர் மாநகர மேயர்
திரு. எஸ்.ஏ. சத்யா,
மாவட்ட
காவல் கண்காணிப்பாளர்
திரு.பெ.தங்கதுரை,
ஒசூர் மாநகராட்சி ஆணையர்
திரு. முகம்மது ஷபீர் ஆலம்
இ.ஆ.ப,
மாவட்ட
அறங்காவல் குழு தலைவர்
திரு. ச.ரஜினிசெல்வம்,
ஓசூர் மாநகர பொது சுகாதாரக்
குழுத் தலைவர்
திரு. என்.எஸ்.மாதேஸ்வரன்,
ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தேர்ப்பேட்டையில் 4 மாட வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் முறையே
விநாயகர்,
சந்திரசூடேஸ்வரர்
மரகதாம்பாள்,
ஆகிய சுவாமிகள் எழுந்தருளி
ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் முதலில்
சிறிய தேரில் விநாயகர்,
அதனைத் தொடர்ந்து
மரகதாம்பாள் உடனுறை
சந்திரசூடேஸ்வரர்
பெரிய தேரிலும்,
3- வது தேரில்
மரகதாம்பாள் தனியாகவும்
என மூன்று தேர்களில் சுவாமிகள்
எழுந்தருளி
தேர்ப்பேட்டை நான்கு மாட வீதிகளில்
பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த தேரோட்டத்தின் போது,
சிவ சிவ மகாதேவா,
சம்போ சிவா மகாதேவா,
ஹர ஹர மஹாதேவா
என பக்தி முழக்கம் எழுப்பியபடி
பக்தர்கள் தேர் வடம் பிடித்து
இழுத்துச் சென்றனர்.
சிறப்பு அலங்காரம்
முன்னதாக
உற்வசமூர்த்தி சுவாமிகளுக்கு
சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும்
சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அன்னதானம்
தேரோட்டத்தை முன்னிட்டு
ஒசூர் நகர் முழுவதும் வீதிக்கு வீதி,
பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் பந்தல் அமைக்கப்பட்டு,
குடிநீர், மோர், சுண்டல், பழங்கள், பானகம், இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேர்த்திருவிழாவை யொட்டி,
ஒசூர் நகரமே வண்ணமயமான
அழகிய கோலங்கள் மற்றும்
வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலமாக காணப்பட்டது.
சிறப்பான பாதுகாப்பு
விழாவையொட்டி,
500-க்கும் மேற்பட்ட போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
100-க்கும் மேற்பட்ட
சிசிடிவி கேமராக்கள்,
உயர் கோபுர கேமராக்கள்,
சுவாமியை தரிசிக்க ஒரு வழியும்
தரிசித்தப் பின் வெளியேற ஒரு வழியும்
என போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை
சிறப்பாக செய்திருந்தனர்.
தேர்த்திருவிழா கமிட்டி
சிறப்பான ஏற்பாடுகள்
தேர்த்திருவிழா கமிட்டித் தலைவர்
முன்னாள் எம்எல்ஏ
திரு. K.A. மனோகரன்,
சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில்
செயல் அலுவலர்
திரு.க.சின்னசாமி,
திரு.ச.வாச்சீஸ்வர் குருக்கள்
மற்றும்
கல்யாண சூடேஸ்வரர்
கமிட்டி உறுப்பினர்கள்
திரு. அருணகிரி
பத்திரிசெட்டி,Secretary.
திரு. S. சந்திரசேகர்,
திரு. பி.வி. ரங்கநாதன்,
திரு. பி. ராஜ்குமார்(பாபு),
திரு. B.K.நாகராஜ்,
திரு. V.M. அசோக்குமார்,
திரு. P. ஜெயதேவன்,
திரு. V. கிருஷ்ணமூர்த்தி
மற்றும் கோயில் பணியாளர்கள்
ஆகியோர்
சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்த தேர்த்திருவிழாவில்
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா
ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
குடும்பத்துடன் கலந்து கொண்டு
தேர் வடம் பிடித்து இழுத்து
சுவாமி தரிசனம் செய்தனர்.
மார்ச் – 4-ம் தேதி
இரவு 10 மணிக்கு
இராவண வாகன உற்சவம்,
மார்ச் – 5-ம் தேதி
இரவு 7 மணிக்கு
தெப்ப உற்சவம்
இரவு 10 மணிக்கு
குதிரை வாகன உற்சவம்
நடைபெறுகிறது.
-------------------------------.