அருள்மிகு சந்திரசூடேஸ்வரர்
திருக்கோயில் தேர்த்திருவிழா
உள்ளூர் விடுமுறை
03-03-2026.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் வட்டம்
அருள்மிகு சந்திரசூடேஸ்வரர்
திருக்கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு
ஒசூர் கோட்டத்திற்குட்பட்ட
ஓசூர்,
சூளகிரி,
தேன்கனிக்கோட்டை
அஞ்செட்டி
ஆகிய வட்டங்களில் உள்ள
அனைத்து அரசு அலுவலகங்களுக்கும்.
கல்வி நிறுவனங்களுக்கும்
(பொது தேர்வுகள் நீங்கலாக)
மார்ச் 3-ம் தேதியன்று
உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இ.ஆ.ப,
அவர்கள் தகவல்
ஒசூர். பிப். 28. -
உள்ளுர் விடுமுறை குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் வட்டம் மற்றும் நகரத்தில் அமைந்துள்ள
அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில்
தேர்த்திருவிழாவை முன்னிட்டு
அன்று ஒரு நாள் மட்டும்
ஒசூர் கோட்டத்திற்குட்பட்ட
ஓசூர்,
சூளகிரி,
தேன்கனிக்கோட்டை
மற்றும்
அஞ்செட்டி
03.03.2026(செவ்வாய்க்கிழமை)
ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும்.
கல்வி நிறுவனங்களுக்கும்
(பொது தேர்வுகள் நீங்கலாக)
உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக வரும்
14.03.2026(சனிக்கிழமை)
ஓசூர் கோட்டத்தில் உள்ள அனைத்து
அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை
செலாவணி முறிச் சட்டம் 1881 -இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால்,
ஓசூர் கோட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் என
கிருஷ்ணகிரி
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இ.ஆ.ப,
தெரிவித்துள்ளார்.