கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் சட்டப்பேரவை தொகுதி
தேர்தல் பறக்கும் படை
வாகனச்சோதனையில்
உரிய ஆவணங்களின்றி
எடுத்துச் செல்லப்பட்ட
ரூ.55லட்சத்து 38 ஆயிரத்து 500
ரொக்கப்பணம் பறிமுதல்
ஒசூர் சார் ஆட்சியரும்
தேர்தல் அதிகாரியுமான
திருமதி ஆக்ரி சேத்தி IAS.
அவர்களிடம்
ஒப்படைப்பு
ஒசூர். மார்ச். 16. –
ஒசூர் சோதனைச் சாவடிகளில்
தேர்தல் பறக்கும் படை சோதனை
ரூ.55.38 லட்சம் பறிமுதல்
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி
சட்டப்பேரவை தேர்தல்
நடைபெறுவதை முன்னிட்டு
மாநிலம் முழுவதும்
தேர்தல் நடத்தை விதிமுறைகள்
அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் பறக்கும் படை
அதைத்தொடர்ந்து உரிய ஆவணங்களின்றி
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம்
கொண்டு செல்வது மற்றும்
பரிசு பொருட்களை கொண்டு செல்வது ஆகியவற்றை தடுக்கும் வகையில்
தேர்தல் பறக்கும் படைகள்
அமைக்கப்பட்டு,
தீவிர வாகன சோதனைகள்
நடத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட
கர்நாடகா மாநிலத்தை ஒட்டியுள்ள
ஜுஜுவாடி சோதனைச்சாவடி,
கக்கனூர் சோதனைச்சாவடி
உட்பட பல்வேறு சோதனைச் சாவடிகளில்
தேர்தல் பறக்கும் படையினர்
வாகன சோதனையில்
ஈடுபட்டு வருகின்றனர்.
மார்ச் 16-ம் தேதியன்று
தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய
வாகனச் சோதனையில்
ஒட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த
ராஜேஷ்(39) என்பவர் தனது காரில்
உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த
ரூ. 5லட்சம்
பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல
வினோத் என்பவர்
உரிய ஆவணங்களின்றி
காரில் எடுத்து வந்த
ரூ.3 லட்சத்து 88 ஆயிரத்து 500
ரொக்கப்பணமும்
பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல பாகலூர் சாலை
ஜி.மங்கலம் கிராமம் அருகே
திருமதி கிருத்திகா
தலைமையில்
தேர்தல் பறக்கும் படையினர்
நடத்திய சோதனையில்,
மஞ்சுநாத் என்பவர்
உரிய ஆவணங்களின்றி காரில்
எடுத்து வந்த
ரூ. 41லட்சத்து 50 ஆயிரம்
பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல கர்நாடகா மாநிலம்
கோலார் மாவட்டம்
சீனிவாசபுரத்தில் இருந்து
சவுடா ரெட்டி என்பவர் ஒசூர் வழியாக
உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த
ரூ.1லட்சத்து 50 ஆயிரம்
தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒசூர் தொரப்பள்ளி கிராமம் அருகே
திருமதி பவித்ரா
தலைமையில்
தேர்தல் பறக்கும் படையினர்
நடத்திய வாகன சோதனையில்
வேணுகோபால் என்பவர்
உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த
ரூ.2 லட்சத்து 57 ஆயிரம்
பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல மத்திகிரி
பேருந்து நிலையம் அருகே
தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் மஞ்சுநாத் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற
ரூ. 93 ஆயிரம்
பறிமுதல் செய்யப்பட்டது.
ஒசூர் பகுதியில்
ஜுஜுவாடி சோதனைச்சாவடி
உட்பட பல்வேறு இடங்களில்
பறிமுதல் செய்யப்பட்ட
ரூ. 55 லட்சத்து 38 ஆயிரத்து 500 பணத்தை
தேர்தல் பறக்கும் படையினர்
ஒசூர் சார் ஆட்சியரும்,
தேர்தல் அதிகாரியுமான
திருமதி. ஆக்ரி சேத்தி IAS.
அவர்களிடம் ஒப்படைத்தனர்..
பின்பு இந்த பணம் ஒசூர் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
------------------------------------------.