“தேர்தல் திருவிழா –
தமிழ்நாட்டின் பெருவிழா”
தமிழ்நாடு
சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026
54-வேப்பனஹள்ளி
சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட,
சூளகிரி ஒன்றியம்,
பேரிகை ஊராட்சி,
கரியசந்திரம் கிராமத்தில்,
நரிகுறவர் இன மக்களிடம்
100 சதவிகிதம் வாக்குப்பதிவு குறித்த
விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்களின் உத்தரவின்படி,
(26.03.2026) நடைபெற்றது.
கிருஷ்ணகிரி. மார்ச். 26. –
100 சதவிகிதம் வாக்குப்பதிவு
விழிப்புணர்வு
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு,
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்களின் உத்தரவின்படி,
54-வேப்பனஹள்ளி
சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட,
சூளகிரி ஒன்றியம், பேரிகை ஊராட்சி, கரியசந்திரம் கிராமத்தில்,
நரிகுறவர் இன மக்களிடம்
100 சதவிகிதம் வாக்குப்பதிவு
குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
மார்ச். 26-ம் தேதியன்று நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து,
பொதுமக்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில்,
கையெழுத்து இயக்கம்,
உறுதிமொழி,
விழிப்புணர்வு பேரணி,
எல்.இ.டி. வாகனம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு,
இருசக்கர வாகன பேரணி
என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல
பர்கூர்,
தளி,
ஒசூர்,
உள்ளிட்ட மலைகிராமங்களில் வசிக்கும்
இருளர் இன மக்கள்,
பழங்குடியின மக்கள்
மற்றும்
நரிகுறவர்
இன மக்களிடம் வாக்களிப்பதின்
அவசியம் குறித்து பல்வேறு
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
நடத்தப்பட்டு வருகிறது.
100 % வாக்குப்பதிவு
அதனைத்தொடர்ந்து,
மார்ச். 26-ம் தேதியன்று
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-
வாக்காளர்கள் 100% வாக்களிப்பதன்
முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்
54-வேப்பனஹள்ளி
சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட,
சூளகிரி ஒன்றியம்,
பேரிகை ஊராட்சி, கரியசந்திரம் கிராமத்தில் வசித்து வரும் நரிகுறவர் இன மக்களுக்கு
100 % வாக்குப்பதிவு குறித்த
விழிப்புணர்வு ஊர்வலம்
மற்றும்
பாரம்பரிய கலை நிகழ்ச்சி
நடத்தப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு
100 % வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு
துண்டு பிரசுரங்கள்
வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.கலா,
திருமதி.விஜயா,
தனி வட்டாட்சியர்
திரு.சின்னசாமி,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு.வினோத்
மற்றும் வருவாய் ஆய்வாளர்கள்,
கிராமநிர்வாக அலுவலர்கள்
துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்துகொண்டனர்.
------------------------------------.